லெஜன்ட் முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி?

By Siva

சென்னை: இலங்கையை சேர்ந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கூல் கேப்டன் என்று பெயர் வாங்கிய தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்கிற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது.

கபிர் கான் இயக்கி வரும் 83 படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங்கும், அவரின் மனைவியாக தீபிகா படுகோனேவும் நடித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ஜோடியாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்த சாதனை மனிதர் ஆவார். அதனால் அவர் சாதனையை குறிக்கும் வகையில் படத்திற்கு 800 என்று பெயர் வைக்கிறார்களாம். 800 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

லாபம்

லாபம்

விஜய் சேதுபதி தற்போது லாபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்துள்ள கடைசி விவசாயி படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. விஜய் சேதுபதிக்கு கோலிவுட்டிலேயே கை நிறைய படங்கள் உள்ளது. அதை நடித்து முடிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

சயீரா நரசிம்ம ரெட்டி

சயீரா நரசிம்ம ரெட்டி

சிரஞ்சீவியின் வாழ்க்கை வரலாற்று படமான சயீரா நரசிம்ம ரெட்டியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி வைஷ்ணவ் தேஜின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். வைஷ்ணவ் தேஜ் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் ஆவார்.

வில்லன்

வில்லன்

விஜய் சேதுபதியின் சிறப்பே தான் ஒரு முன்னணி ஹீரோவாக இருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக் கொள்வது தான். ஹீரோவை போன்றே வில்லன் கதாபாத்திரமும் விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கிறது. விஜய் சேதுபதி போன்று அனைத்து ஹீரோக்களும் ரிஸ்க் எடுக்க விரும்புவது இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X