twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதியா ?வில்லன் சேதுபதியா?...இனி வரிசையா வில்லன் ரோல் தான் போல

    |

    சென்னை : லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவகாற்று படத்தின் முலம் ஹீரோ ஆனார்.

    சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்த விஜய் சேதுபதி, பீசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன. அதற்கு பிறகு வரிசையாக வந்த பட வாய்ப்புகளால் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் பிரபலமான நடிகரானார். இன்று 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

    எந்த ரோலுக்கும் ஓகே

    எந்த ரோலுக்கும் ஓகே

    வயதான ரோல், கெஸ்ட் ரோல் என எந்த ரோலில் நடிக்க சொன்னாலும் ஓகே சொல்லி , ஒரே சமயத்தில் பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர சினிமா தயாரிப்பு, டப்பிங் பேசுவது, பின்னணி பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.

    ஹீரோவாக 4 படங்கள்

    ஹீரோவாக 4 படங்கள்

    சமீபத்தில் இவர் நடித்து ரிலீசான மாமனிதன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் மெரி கிறிஸ்துமஸ், 19 (1)(எ), விடுதலை, காந்தி டாக்ஸ், மும்பைகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனால் விஜய் சேதுபதியின் ஹீரோ, கேரக்டர் ரோல்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றனவோ அதே அளவு வில்லன் ரோலும் வரவேற்பை பெற்றுள்ளது.

     வில்லன் அவதாரம் எடுத்த விஜேஎஸ்

    வில்லன் அவதாரம் எடுத்த விஜேஎஸ்

    விஜய் சேதுபதி, சுந்தரபாண்டியன், விக்ரம் வேதா போன்ற படங்களில் சிறிய அளவில் வில்லன் ரோலில் நடித்திருந்தாலும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த பவானி கேரக்டர் தான் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் வயதான வில்லன் ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

     இத்தனை படங்களில் வில்லனா

    இத்தனை படங்களில் வில்லனா

    மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளிலும் வில்லன் ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்சாக விஜய் சேதுபதியை தான் தேடி வருகின்றனர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் ஆகிய படங்களிலும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

    Recommended Video

    Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
    விஜய் சேதுபதியா?வில்லன் சேதுபதியா?

    விஜய் சேதுபதியா?வில்லன் சேதுபதியா?

    வரிசையாக பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருவதால் இந்திய அளவில் பாப்புலரான வில்லன் நடிகராகவும் மாறி விட்டார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என ஒரே நேரத்தில் நடிக்க கமிட்டாகி வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான் என்பதால் இவரின் மாறுபட்ட நடிப்பை பார்க்க அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

    English summary
    After Master, Vikram movies mass hit, Vijay Sethupathi was comitted in Pushpa 2, Jawan, Japan to play antagonist. Meanwhile he also busy in acting as hero in some movies. He is the only person to play hero and villain roles in same time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X