இன்று பர்த் டே... பிரமாண்ட கேக் வெட்டி 'துக்ளக் தர்பாரி'ல் கொண்டாடிய விஜய் சேதுபதி

By

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

தமிழ் சினிமாவின் பிசி நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ என்றில்லாமல், சிறந்த கதை என்றால் எந்த கேரக்டரிலும் நடிப்பார். அதனால்தான் ஹீரோவாக நடித்துக்கொண்டே, ஒரு பக்கம் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் அவரால் நடிக்க முடிகிறது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறார் இப்போது.

பிறந்த தினம்

பிறந்த தினம்

இந்நிலையில், தனது 42 வது பிறந்த தினத்தை, துக்ளக் தர்பார் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கொண்டாடியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்குகிறார். பார்த்திபன், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி ஜோடியாக, அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

பிறந்த தினம்

பிறந்த தினம்

இந்நிலையில், தனது 42 வது பிறந்த தினத்தை, துக்ளக் தர்பார் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கொண்டாடியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்குகிறார். பார்த்திபன், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி ஜோடியாக, அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

யாதும் ஊரே...

யாதும் ஊரே...

இன்று, அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கிழக்கு கடற்கரை சாலையில் இன்று நடக்கிறது. அங்கும் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கிழக்கு கடற்கரை சாலை

கிழக்கு கடற்கரை சாலை

இதற்காகப் படக்குழு பிரமாண்ட கேக்கை தயார் செய்துள்ளது. இந்தப் படத்தில், விஜய்சேதுபதியின் தோற்றம் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ்

இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா, நடிகர் விவேக், கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X