டோலிவுட், பாலிவுட் வரிசையில் விஜய் சேதுபதியின் அடுத்த என்ட்ரி... சூப்பர் ஸ்டாரே கொடுத்த ஆஃபர்..?
சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸ் இந்த வாரம் வெளியாகிறது.
ராஜ் & டிகே இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், முதன்முறையாக கன்னடத்திலும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெரைட்டியான விஜய் சேதுபதி
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்த விஜய் சேதுபதி, பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக அடையாளம் பெற்றார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து மாஸ் காட்டினார். ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என நடிப்பில் வெரைட்டி காட்டிய விஜய் சேதுபதி, இப்போது ரொம்பவே பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

முதன்முறையாக கன்னடத்தில்
தமிழில் இருந்து தெலுங்கு பக்கம் சென்ற விஜய் சேதுபதி அப்படியே மலையாளம், இந்தியிலும் பிஸியாகிவிட்டார். ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி என்ற இந்தி வெப்சீரிஸ், வரும் 10ம் தேதி அமேசானில் ரிலீஸாகிறது. மேலும் ஷாருக்கானுடன் ஜவான், கத்ரினா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதன்முறையாக கன்னடத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி
தமிழில் ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம், விஜய்யுடன் மஸ்டர், சிம்புவுடன் செக்க சிவந்த வானம் என டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்ட விஜய் சேதுபதி, இந்தமுறை கன்னட சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி வைக்கவுள்ளாராம். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் தற்போது கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீனி இயக்கி வரும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜெயராமும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியையும் கோஸ்ட் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு?
விஜய் சேதுபதி கண்டிப்பாக கோஸ்ட் படத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணைந்தது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவராஜ்குமார் தற்போது தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் முடிந்த பின்னரே கோஸ்ட் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். அதனால் அதற்குள் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்கை முடித்து விடுவார் என சொல்லப்படுகிறது. இதுவரை கன்னட படங்களில் மட்டும் நடிக்காமல் இருந்து வந்த விஜய் சேதுபதி, தற்போது அங்கும் தடம் பதித்துள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











