Just In
- 5 min ago
ஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை!
- 14 min ago
என்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்!
- 32 min ago
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
- 48 min ago
எது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு!
Don't Miss!
- News
சின்னக் கொம்பனுடன் வாக்கிங்.. பாத்திங், ஸ்விம்மிங் கற்று கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
- Finance
தங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..!
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Lifestyle
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- Automobiles
2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாஸ்டர் மக்கள் செல்வன்.. அமீர்கான் படத்துக்காக இப்படி ஒரு காரியம் செய்கிறாரா?
சென்னை: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, அமீர்கானின் பாலிவுட் படத்துக்காக ரெடியாகி வருகிறார் விஜய்சேதுபதி.
ஆஸ்கர் விருது வென்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்தை தழுவி பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார் அமீர்கான்.
3டி இடியட்ஸ் படத்திற்கு பிறகு, அமீர்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் கரீனா கபூர் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் படம்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான ஃபாரஸ்ட் கம்ப் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளையும் பல கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றது. அந்த படத்தை தற்போது, பாலிவுட்டுக்கு ஏற்றவாறு உருமாற்றி அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர் கான் லால் சிங் சத்தா எனும் தலைப்பில் நடித்து வருகிறார்.

மக்கள் செல்வன்
கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் நம்ம மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், அமீர்கானின் பாலிவுட் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ரெடியாகி வருகிறார்.

25 கிலோ
லால் சிங் சத்தா படத்திற்காக, அமீர்கான் 21 கிலோ எடை குறைத்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி அந்த படத்திற்காக 25 கிலோ எடை வரை குறைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே லால் சிங் சத்தா படத்தில் அமீர்கானின் லுக் எல்லாம் கசிந்த நிலையில், தற்போது இப்படி ஒரு மாஸான அப்டேட் லீக்காகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உழைப்பாளி
மக்கள் செல்வன் என பெயர் எடுத்துள்ள விஜய்சேதுபதி, தமிழிலேயே அரை டஜன் படங்களை ரிலீசுக்கு வைத்துள்ள நிலையில், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் எனவும் தனது சிறகுகளை விரித்து பறந்து, தனது கடின உழைப்பை கொட்டி அசத்தி வருகிறார். அமீர் கான் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவது தமிழ் ரசிகர்களுக்கு பெருமையான தருணம் தான்.

எப்போ ரிலீஸ்
அமீர்கான் மற்றும் வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் லால் சிங் சத்தா திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. மாஸ்டர், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட விஜய்சேதுபதியின் படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன.