எஸ்.பி.ஜனநாதனின் மொத்த மருத்துவ செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி

சென்னை : தனது ரசிகர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடியவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

லாபம் படத்தின் எடிட்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த போது, ஜனநாதன் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஜனநாதனை பரிசோதித்த டாக்டர், அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக கூறி உள்ளனர்.

Vijay Sethupathi to pay late SP Jananathans full medical expenses

மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும் டாக்டர்கள் கூறி உள்ளனர். இருந்தாலும் அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என டாக்டர்களிடம், விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, மாரடைப்பு ஏற்பட்டு, நேற்று காலை ஜனநாதன் உயிரிழந்தார். இந்நிலையில் ஜனநாதன் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் ஒட்டுமொத்த செலவையும் தானே செலுத்துவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளாராம்.

ஜனநாதனின் மரண செய்தி கேட்டு கோலிவுட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களில் இரங்கலை செலுத்தி வந்தனர். இன்று நடைபெற்ற ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, கண்ணீர் விட்டு அழுதபடி, பூத்தூவிக் கொண்டு சென்றார்.
முன்னதாக ஜனநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி, ஜனநாதனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X