என்னங்க இது?..வில்லனாகவே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டாரா விஜய் சேதுபதி?..ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, பிரபல டோலிவுட் நடிகருக்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி
எதார்த்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் அனைவரும் மிரண்டு போகும் வகையில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து ஆத்தாடி மனுஷன் என்னமாக நடிச்சி இருக்காருப்பா என்று அனைவரும் அவரை பாராட்டினர்.

விக்ரம்
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே போல பகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 மொழிகளில்
நாளை திரைப்படம் வெளியாகி உள்ளதால் விக்ரம் பட வெளியீட்டை ரசிகள் திருவிழாவாக கொண்டாட தயாராகி விட்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி என 5 மொழிகளில் பேன் இந்திய திரைப்படமாக நாளை இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், மெர்சலான வில்லத்தனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

மீண்டும் வில்லனாக
இந்நிலையில், விஜய் சேதுபதியை தற்போது, திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 'விக்ரம்' படத்தை விட இந்த படத்திற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. வில்லனாக அவர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்த நிலையில் ஏதோ பெரிய நடிகர்கள், வித்தியாசமான வேடம் என்பதால் வில்லனாக நடித்தீர்கள், அதையே தொழிலாக மாற்றினால் எப்படி என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











