கே.ஜி.எஃப் இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி.. நீளும் படவரிசை!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் படவரிசை நீண்டு கொண்டே போகிறது. ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
இந்நிலையில் கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கொரோனா தொற்று
விஜய் சேதுபதியின் நடிப்பில் சம்மரில் ஐந்து திரைப்படங்கள் வெளிவரவிருந்தன. துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் & கடைசி விவசாயி ஆகிய படங்கள் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை.

அடுத்தடுத்த பணிகள்
கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்பு பணிகள் நின்றுள்ள நிலையில் பிஸியான நடிகரான விஜய் சேதுபதியின் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது. நவரசா, முகிழ், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல், இடம் பொருள் ஏவல் & வெப் தொடர் ஒன்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள படங்கள் வரிசை ஒரு புறம் இருக்க, நடிக்கவுள்ள புது படங்களின் வரிசையும் நீண்டு கொண்டே போகிறது. அடுக்கடுக்காக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்
இந்நிலையில் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











