வைரலாகும் ’96’ மேக்கிங் வீடியோ.. அப்படியொரு எமோஷனலான சீனுக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க!

சென்னை: விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் மேக்கிங் வீடியோவை அந்த படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Trisha வை கிழித்த மீரா • Don't Copy Me #OneAndOnlySuoermodelOfIndia

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளைக் கொண்ட திரிஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜானுவாக நடித்து, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.

காதல் படங்கள் என்றாலே திரிஷா தான் என்கிற அளவுக்கு தனது பிராண்ட் முத்திரையை மீண்டும் ஒருமுறை உரக்க பதிவு செய்து இருந்தார்.

ராம், ஜானு

ராம், ஜானு

பள்ளிப்பருவ முதல் காதலை பல படங்கள் சொல்லி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், அதிலேயெ பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்றால், அது நம்ம ராம் மற்றும் ஜானுவின் முதல் காதல் கதை தாங்க, இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் நெஞ்சில் பசுமையான பல நினைவுகளை தட்டி எழுப்பிய நிலையிலேயே வெற்றி அடைந்தது என்று சொல்லலாம்.

ஜெஸ்ஸியா? ஜானுவா?

ஜெஸ்ஸியா? ஜானுவா?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார் நடிகை திரிஷா. மீண்டும் அந்த கதாபாத்திரத்தை ஓவர் டேக் செய்ய தன்னால் மட்டுமே முடியும் என 96 படத்தில் ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார்.

எவ்ளோ கேஷுவலா

எவ்ளோ கேஷுவலா

நடிகை திரிஷா ஹோட்டல் ரூமில் விஜய்சேதுபதியை பார்த்து, அவ்வளவு எமோஷனலாக அழுது நடிக்கும் காட்சியின் மேக்கிங் வீடியோவை தற்போது, இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், ப்பா.. எப்படித் தான் இவ்ளோ கேஷுவலா இருந்துட்டு, கேமரா ஆன் பண்ணதும், அப்படி எமோஷனலா நடிக்கிறாங்களோ தெரியலையே என வியந்து வருகின்றனர்.

லாக்டவுனிலும் திரிஷா மேஜிக்

லாக்டவுனிலும் திரிஷா மேஜிக்

ஜானுவாக பார்த்த திரிஷாவை மீண்டும் ஜெஸ்ஸியாக நம் கண் முன்னே, இந்த லாக்டவுன் சமயத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வீட்டில் இருந்தபடியே, இயக்கி மேஜிக் செய்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2வாகவே இருந்த கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில், சிம்பு, திரிஷா நடிப்பை பலரும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

குந்தவையாக

குந்தவையாக

மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்த நடிகை திரிஷா, மீண்டும் தற்போது அவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் என மெகா ஸ்டார் படமாக உருவாகி வரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பிராட்டியாக திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X