பொண்ணுங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான்.. விஜய் சேதுபதியை சீண்டிய காப்பான் படம்.. சர்ச்சை!
காப்பான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலாய்க்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: காப்பான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலாய்க்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முதலில் மோசமான விமர்சனங்களை பெற்ற காப்பான் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் வசூல் ரீதியாக காப்பான் படம் இன்னும் பெரிய பிரேக் பெறவில்லை. குறைந்தது இன்னும் ஒரு வாரம் ஓடினால்தான் படத்தில் போட்ட காசை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சி
இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் மோகன்லால் நடித்து இருக்கிறார். அதேபோல் ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா ஆகிய பிரபலங்களும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்கள். நடிகர் சூர்யா இதில் பிரதமருக்கு பாதுகாவலராக நடித்து உள்ளார்.

காட்சி என்ன
இந்த நிலையில் இந்த படத்தில் வரும் காட்சிதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் சமுத்திரக்கனியின் மனைவி பாத்திரம் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு இருப்பார். அதில் விஜய் சேதுபதி புகைப்படம் இருக்கும்.

என்ன கேள்வி
இந்த புகைப்படத்தை பார்த்து சமுத்திரக்கனி, இவன் வேற.. சும்மா இருக்க மாட்டான்.. எப்ப பாரு பொண்ணுங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான் என்று குறிப்பிட்டு இருப்பார். விஜய் சேதுபதியை காமெடியாக கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி அமைந்து இருக்கும்.

என்ன கொதிப்பு
இந்த நிலையில் விஜய் சேதுபதியை கிண்டல் செய்துவிட்டார்கள். அவரை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இந்த காட்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காப்பான் படத்திற்கு முன் கே வி ஆனந்த் விஜய் சேதுபதியை வைத்து கவண் படம் இயக்கினார்.

என்ன மோசம்
பொதுவாக கே வி ஆனந்த் தன்னுடைய படத்தில், தனக்கு முந்தைய படத்தின் ஹீரோவை கிண்டல் செய்வது வழக்கம். கோ படத்தில், அயன் சூர்யாவை அவர் கிண்டல் செய்திருப்பார். அப்படித்தான் இதிலும் கே வி ஆனந்த் விஜய் சேதுபதியை கிண்டல் செய்துள்ளார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











