ஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi
Recommended Video

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோலிவுட்டின் பிசியோ பிசியான நடிகரான விஜய் சேதுபதி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பந்தா இல்லாத விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ஆவார்.
விஜய் சேதுபதி
பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் சேதுபதியை வாழ்த்தி ட்வீட் போடுவதால் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.
ஹீரோ
துணை நடிகராக நடித்து இன்று பெரிய ஹீரோவாகியுள்ளார் விஜய் சேதுபதி. பொறுமையும், நம்பிக்கையும் இருந்தால் முன்னேறலாம் என்பதை நிரூபித்துள்ளார் அவர்.
ரசிகர்கள்
பிற நடிகர்களின் ரசிகர்களும் மனதார பாராட்டும்படி நடந்து கொள்பவர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. பிற நடிகர்களை வாழ்த்த சூர்யா ரசிகர்கள் தயங்குவதே இல்லை.
பந்தா
ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கினாலும் கோபப்படாமல் டேய் விடுங்கடா என்று கூறும் அன்பு உள்ளத்திற்கு சொந்தக்காரர் விஜய் சேதுபதி.
மரியாதை
ரசிகர் யாராவது செல்ஃபி கேட்டால் முகம் சுளிக்காமல் போஸ் கொடுப்பவர் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











