விஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு!

இயக்குனர் ஜனநாதன் உதவியாளர் இயக்கும் படத்தில் இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

சென்னை : இயக்குனர் ஜனநாதன் உதவியாளர் இயக்கும் படத்தில் இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சைரா நரசிம்மரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சிந்துபாத் எனும் படத்திலும் அவர் நடிக்கிறார்.

அறிவிப்பு:

அறிவிப்பு:

இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

பெரிய பட்ஜெட்:

பெரிய பட்ஜெட்:

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு:

படப்பிடிப்பு:

கிறிஸ்துமஸ், புத்தாண்டு , காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம். மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இசைக்கலைஞர்

இசைக்கலைஞர்

இப்படத்தின் நாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. முதன்முறையாக இப்படத்தில் இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X