மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ரெடியாகும் கொரோனா குமார்.. விஜய்சேதுபதி போட்ட அசத்தல் டிவீட்!
சென்னை: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் அடுத்த பாகம் உருவாகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சினிமா கலைஞர்களின் பார்வைகளும் கொரோனாவை சுற்றி வட்டமிடுகின்றன.
ஏகப்பட்ட கொரோனா கவிதைகள், பாடல்கள், குறும்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், 'கொரோனா குமார்' என்ற டைட்டிலில் ஒரு படத்தை இயக்க இயக்குநர் கோகுல் திட்டமிட்டு இருக்கிறார்.

முதல் படம்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் கோகுல், அதற்கு முன்னதாக ஜீவா, ஸ்ரேயாவை வைத்து இயக்கிய படம் தான் ரெளத்திரம். படத்தின் திரைக்கதை பாராட்டுக்களை அள்ளினாலும், அந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியை குவிக்கவில்லை.

விஜய்சேதுபதியுடன் இணைந்து
ரெளத்திரம் படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்து இயக்குநர் கோகுல் எடுத்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. குமுதா ஹேப்பி அண்ணாச்சி என விஜய்சேதுபதி பேசும் அந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

பாகுபலி ரேஞ்சுக்கு
2016ம் ஆண்டு கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படம் காமெடி மற்றும் வரலாற்று திரைப்படமாக உருவாகி இருந்தது. அந்த படத்தின் டீசர், டிரைலர் எல்லாம் பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்பட்ட நிலையில், ரிலீசுக்குப் பின்னர் படுதோல்வியை சந்தித்தது காஷ்மோரா.

ஒர்க்கவுட் ஆகவில்லை
விஜய்சேதுபதியுடன் இயக்குநர் கோகுல் மீண்டும் கூட்டணி வைத்தால் அந்த படம் ஹிட் ஆகும் என நினைத்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜுங்கா படமும் பிளாஃப் ஆனதால், இயக்குநர் கோகுல் சில காலம் ஆள் அட்ரஸே காணாமல் அப்ஸ்காண்ட் ஆனார். இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

கொரோனா குமார்
கொரோனா வைரஸை வைத்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பலரும் திரைப்படங்கள் எடுப்பார்கள் என நினைத்து வந்த நிலையில், அதனை முதல் ஆளாக கையில் எடுத்துள்ளார் இயக்குநர் கோகுல். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
A spin-off that will bring the roof down😇https://t.co/LOh9sBko2g@sathishoffl @cinemawalaoffl @thinkmusicindia @PradeepERagav @sidvipin @palanibalan1 @proyuvraaj 🥁🔊 pic.twitter.com/CIGpWgZIYO — VijaySethupathi (@VijaySethuOffl) June 17, 2020 '>
மக்கள் ஹேப்பி அண்ணாச்சி
கொரோனா வைரஸ் காரணமாக மக்களிடம் பீதி இருந்தாலும், அதை கண்டு யாரும் பயப்படாமல், அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்லும் ரூல்களை யாரும் கடைபிடிக்க மறுக்கிறார்கள், இதனை கருவாக வைத்தே ‘கொரோனா குமார்' உருவாகி வருவதாகக் கூறியுள்ளார் கோகுல். கோகுல் சரக்கு பாட்டிலில் கையை கழுவி, கொரோனா குமார் ஸ்க்ரிப்ட் எழுதும் வீடியோவை பதிவிட்ட விஜய்சேதுபதி மக்கள் ஹேப்பி அண்ணாச்சி என்றும் அசத்தலாக டிவீட் போட்டுள்ளார்.

கடைசி கட்ட படப்பிடிப்பு
கொரோனா குமார் படத்திற்கு முன்னதாக கோகுல் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ஹெலென் படத்தின் தமிழ் ரீமேக் படம் திரைக்கு வர காத்திருக்கிறது. இன்னும் ஒரு 5 அல்லது 6 நாள் மட்டுமே அந்த படத்தின் ஷூட்டிங் மீதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











