ரியோ ராஜின் அடுத்த படம்.. விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ராம் in லீலா’ ஃபர்ஸ்ட் லுக்.. ஹீரோயின் யாரு தெரியுமா?
சென்னை: ஜோ, ஆண் பாவம் பொல்லாதது என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை இளம் நட்சத்திரமாக மாறி வருகிறார் நடிகர் ரியோ ராஜ். விஜய் டிவியில் இருந்து சந்தானம், சிவகார்த்திகேயனுக்குப் பிறகு கவின் பெரிய பாக்ஸ் ஆபீஸ் நடிகராக மாறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து ரியோ ராஜ் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக மாறியுள்ளார்.
5 கோடி முதல் 8 கோடிக்குள் படமெடுத்து 20 கோடி பாக்ஸ் ஆபீஸ் பெற்றால் அதுவே நல்ல வெற்றி தான். 20 கோடியில் படமெடுத்துவிட்டு 10 கோடி வசூல் வந்தால் அந்த படம் தோல்விப் படமாகவே மாறும்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் மூலம் ஹீரோவான பிக் பாஸ் பிரபலம் ரியோ ராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்கு 'ராம் in லீலா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆண் பாவம் பொல்லாதது வெற்றி: சத்ரியன் படத்தில் நண்பனாக நடித்து சினிமாவில் அறிமுகமான ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர், பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, நிறம் மாறும் உலகில், ஸ்வீட் ஹார்ட் மற்றும் ஆண் பாவம் பொல்லாதது என வரிசையாக அவரது படங்கள் வெளியாகி வருகின்றன. ஜோ படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்து அந்த படம் வெற்றிப் பெற்ற நிலையில், அதே கூட்டணியில் வெளியான ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் இந்த ஆண்டு 20 கோடிக்கும் அதிகமான வசூலை பாக்ஸ் ஆபீஸில் ஈட்டி ரியோ ராஜுக்கு வெற்றியை கொடுத்தது.
விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியோ ராஜின் அடுத்த படமான 'ராமின் லீலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.
யாரு ஹீரோயின்?: ரியோ ராஜ் தொடர்ந்து இளம் நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார். மீண்டும் மாளவிகா மனோஜ் உடன் நடிக்கிறாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த முறை அவர், வர்த்திகா ஜெயின் என்பவருடன் ஜோடி போட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வந்த வர்த்திகா ஜெயின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே செம க்யூட்டாக உள்ளார். ராமசந்திரன் கண்ணன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். அவரது லீலைகள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











