டார்க் காமெடி ஜானரில்..மௌனபடம் "காந்தி டாக்ஸ்"..வசனமாடா முக்கியம்?
சென்னை : விஜய்சேதுபதி நடிக்கும் காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டியோஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய்சேதுபதி
எதார்த்த நடிகனாக விஜய்சேதுபதி ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

காந்தி டாக்ஸ்
விஜய்சேதுபதி தற்போது நகைச்சுவை மற்றும் வசனமே இல்லாத மௌனபடமாக உருவாக உள்ள காந்தி டாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கிஷோர் பெலேகர் இயக்கி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

வசனம் இல்லாத சைலன்ட் படம்
வசனம் இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகி வரும் நிலையில், இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை
வசனமே இல்லாத மௌன படம் என்பதால் ஏ.ஆர். ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது. அதில்,அரவிந்த் சாமி ஒரு பிச்சைக்காரனுக்கு 2ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார். அதே போல விஜய்சேதுபதியும் ஹேர்டையில் பணத்தை காயவைத்து குரங்கு பொம்மைக்குள் பணத்தை மறைத்து வைக்கிறார்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
வித்தியாசமாக வெளியாகி உள்ள இந்த அறிமுக வீடியோவின் பின்னணியில் ரகுபதிராகவ ராஜாராம் பாடலின் இசை வருகிறது. வசனங்கள் எதுவும் இல்லாமல், மொழி தடைகளை கடந்து இந்த திரைப்படம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு, 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செக்கச் சிவந்த வானம் டீம்
செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். Zee Studios தயாரித்து வழங்கும் இப்படத்தை கியூரியஸ் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் மற்றும் திரைப்பட மில் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











