‘மைக்கேல்‘ கெட்டப்பில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி… பிறந்த நாளில் தரமான சம்பவம்!
சென்னை : விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு மைக்கேல் படக்குழு விஜய்சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் பாவனி என்ற கதாபாத்திரத்தில், மோசமான வில்லனாக நடித்து ரசிகர்களை மிரளவிட்டார். மாஸ்டர் திரைப்படம் பிளாஸ் பஸ்டர் ஹிட்டடித்தது.
இதையடுத்து, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் இதுவரைப் பார்க்காத ஒரு புது விஜய்சேதுபதியாக நடித்து அப்லாசை அள்ளினார்

விஜய்சேதுபதி
வில்லன் பாதி...ஹீரோ பாதி என இரண்டு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக கையாட்டு வரும் விஜய்சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஹிட்டடித்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நயன்தாரா, சமந்தா என இரண்டு நடிகைகளுடன் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படம் பிளாஸ் பஸ்டர் ஹிட்டடித்தது.

மைக்கேல்
ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய்சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் மைக்கேல் படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக்,நடிகை வரலட்சுமி சரத்குமார்,நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

5 மொழிகளில்
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள மைக்கேல் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

மிரட்டலான டீசர்
மைக்கேல் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டீசரில், வேட்டை தெரியாத மிருகத்த மத்த மிருகங்களெல்லாம் வேட்டையாடிடும் மைக்கேல் என்று வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில், சந்தீப் கிஷன் கையில் ஆயுத்துடன் அக்ஷன் நாயகனாக இருக்கிறார்.

கெத்துக்காட்டும் விஜய் சேதுபதி
இந்நிலையில், விஜய்சேதுபதியின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு மைக்கேல் படக்குழு விஜய்சேதுபதியின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய்சேதுபதி பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் வேட்டியை மடித்துக்கட்டி, சுருட்டை பிடித்தபடி சும்மா மிரட்டலாக உள்ளார். விஜய்சேதுபதியின் பிறந்த நாளில் வெளியான இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











