ஒரு கிராமத்தையே உருவாக்கியிருக்காரே வெற்றிமாறன்.. மேக்கிங் வீடியோ வெளியிட்ட விடுதலை 2 டீம்!
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான இதன் முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கேரக்டர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நிலையில் 2வது பாகத்திலும் அவர் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.,

இதனிடையே இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் லீடாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிக்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானிஸ்ரீ, கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. படம் அதிரடி சரவெடியாக தன்னுடைய கதைக்களத்தால் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தற்போது வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் கதைக்களம் எப்படி அமைந்திருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

AI தொழில்நுட்பம்: முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கேரக்டர் மிகப்பெரிய கவனத்தை பெற்ற நிலையில் தற்போது விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் இளம் வயது லுக்கிற்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருந்தனர். இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து படக்குழுவினர் ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலை 2 பட பிரமோஷன்கள்: அந்த வகையில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இதனிடையே, படக்குழுவினரும் மறுபுறம் அடுத்தடுத்த கிளிம்ப்ஸ் வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்த படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார். இதன் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் ஓட்டு வீடுகளை அமைக்கும் பணியில் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

மேக்கிங் வீடியோ: இதே போல ஒவ்வொரு விஷயத்தையும் வெற்றிமாறன் மெனக்கெட்டு படக்குழுவினருக்கு அறிவுறுத்துவதையும் பார்க்க முடிகிறது. இந்த சாலையில் இப்படி தெரிய வேண்டும், அந்த சாலையில் அப்படி போக வேண்டும் என்று அவர் கொடுக்கும் அறிவுறுத்தல்கள் மிரட்டுகிறது. இவ்வாறு செட்களை அமைப்பதற்கே படக்குழுவினர் இவ்வளவு மெனக்கெடல்களை கொடுத்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அந்த படத்தின் வேலைகளில் தன்னை அவர் ஈடுபத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications