Viduthalai 2 Blue Sattai Maran Review: சூரி பத்தோட 11.. விஜய் சேதுபதி..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, நேற்று வெளியான படம் விடுதலை பாகம் 2. இந்தப் படம் ஏற்கனவே வெளியான விடுதலை பாகம் 1இன் அடுத்த பாகமாக வெளியாகியுள்ளது. விடுதலை 1இல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தை கைது செய்வதுதான், படத்தின் திரைக்கதையாக இருந்தது. இரண்டாம் பாகத்தில், பெருமாள் வாத்தியார், எப்படி சித்தாந்தத்தை பேசும் வாத்தியாராக மாறினார், அதாவது கம்யூனிச சித்தாந்தத்தைப் பேசும், வாத்தியாராக எப்படி மாறினார் என்பதுதான் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், விடுதலை பாகம் 2 படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

விடுதலை பாகம் 1 படமானது, காமெடி நடிகராக மட்டுமே இருந்து வந்த சூரியை, கதாநாயக அந்தஸ்திற்கு உயர்த்திய படம். விடுதலைக்கு முன்னர், சூரியை காமெடி நடிகராக பார்த்து வந்த ரசிகர்களும் பொதுமக்களும், விடுதலை படத்திற்குப் பின்னர், கதாநாயகனாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவு, இந்த ஆண்டு வெளியான கருடன் படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. கொட்டுக்காளி படத்திற்கும் இது கை கொடுத்தது. இப்படியான நிலையில், விடுதலை பாகம் 2 குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், பாகம் 1 மற்றும் பாகம் 2 படங்களின் திரைக்கதையை ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

vijay sethupathi viduthalai part 2 blue sattai maran 2

ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், ' விடுதலை பாகம் 2இல் சாதாரண பள்ளி வாத்தியாராக இருந்த பெருமாள் வாத்தியார் எப்படி போராளியாக மாறினார் என்பதுதான் கதையாக உள்ளது. விடுதலை பாகம் 1, மறக்க முடியாத படம். அதற்கு காரணம், படத்தின் கதையும் திரைக்கதையும்தான். படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள், இப்போதும் நம் மனதில் இருக்கும் அளவுக்கு மிகவும் தரமாக அந்தக் கதாபாத்திரங்களை எழுதியிருப்பார்கள். அதே கதாபாத்திரங்கள் இந்தப் படத்திலும் வருகின்றன. ஆனால் அவை எதுவுமே, மனதில் நிற்கவில்லை. சூரியே பத்தோட 11வதாதான் வருகின்றார். விஜய் சேதுபதி கதாபாத்திரமும் மிகவும் வலுவாக எழுதப்படவில்லை. கருத்து சொல்லீட்டே இருக்கின்றார், காதில் ரத்தம் வரும் அளவுக்கு கருத்து சொல்லிக் கொண்டு உள்ளார்.

தேவையற்ற காட்சிகள்: விஜய் சேதுபதி எப்படி போராளியாக மாறினார் என்பதைச் சொல்லுவதற்கு 50 காட்சிகள் வைத்துள்ளார்கள். ஒரு நல்ல திரைக்கதை என்பது, படத்தில் இருந்து ஒரு காட்சியை எடுத்துவிட்டாலும் படம் முழுக்க, அதன் ஜம்ப் தெரியவேண்டும். ஒரு காட்சியை எடுத்துவிட்டால், அதன் பின்னரும் ஜம்ப் தெரியவில்லை என்றால், அது தேவையில்லாத காட்சி தான். அப்படி இந்தப் படத்தில் பல காட்சிகள் உள்ளது. கதாபாத்திரங்களும் உள்ளது. உதாரணத்திற்கு, மஞ்சு வாரியர் கதாபாத்திரம், வாத்தியாரின் காதலியாக வரும் இந்த கதாபாத்திரம், இந்தப் படத்திற்கு தேவையில்லை.

திரைக்கதை: கதையோட்டத்திற்கு தேவையான காட்சிகள் அமையவேண்டும். ஆனால் இந்தப் படத்தில், எங்கு திரைக்கதையில் வேகம் வேண்டுமோ, அங்கு வேகத்தைக் கூட்டிக் கொண்டார்கள், எங்கு ஸ்பீட் ப்ரேக்கர் வேண்டுமோ, அங்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுக் கொண்டார்கள். படத்தில் ஏகப்பட்ட தேவையற்ற காட்சிகள் உள்ளது. கதாநாயகி காட்சிகள், கதாநாயகனின் குடும்பப் பின்னணி ஆகியவை இந்தப் படத்திற்கு தேவையே இல்லை.

மொத்தத்தில் படம்: பாகம் 1இல் முதல் காட்சியே, மிகவும் பிரமாண்டமாக நம்மை அசரை வைக்கும் அளவுக்கு ஒரு காட்சியோடு படம் தொடங்கும். ஆனால் இந்தப் படத்தில் முதல் காட்சியே ஒரு அபத்தமான காட்சியாக உள்ளது. பாகம் 2இல் முதல் பாதி ஓ.கே ரகம்தான். குறிப்பாக கென் வரும் காட்சிகளும் கென்னுக்கான சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது. வெற்றி மாறன் படங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அவரது இயக்கத்தில் மோசமான படம் என்றால் அது விடுதலை பாகம் 2 தான் என எங்களுக்கு தோன்றியது. உங்களுக்கும் அது தோன்றும்" எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X