Viduthalai 2 Box Office: விடுதலை 2க்கு மவுசு ஏறுச்சா.. இறங்குச்சா? முதல் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன்!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அதாவது, டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, வெற்றி மாறனின் இயக்கத்திற்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளமும், விஜய் சேதுபதி மற்றும் சூரியின் ரசிகர்கள் பட்டாளமும் படத்தைக் கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

விடுதலை பாகம் 1இல் படம் சூரி கதாபாத்திரமான குமரேசன் கதாபாத்திரத்தை மைய்யபடுத்திய படமாக இருந்தது. ஆனால் விடுதலை பாகம் 2இல் முழுக்க முழுக்க, விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள வாத்தியார் கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக மஞ்சு வாரியரின் தோற்றமும், விஜய் சேதுபதியின் தோற்றமும் பெரும் கவனத்தினை ஈர்த்தது.

viduthalai part 2

படத்தின் ட்ரைலர் மற்றும் நடித்தவர்களின் தோற்றம் ரசிகர்களை ஒருபக்கம் ஈர்த்தால், படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜா, ரசிகர்களை உருகவைத்துவிட்டார். அதிலும் அவரே எழுதி பாடியுள்ள 'தினம் தினமும் உன் நெனப்பு' பாடல் யூடியூப் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்கள் அந்தப் பாடலை ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டாடினர்.

இளையராஜா: படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்தது மட்டும் இல்லாமல், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்து இளையராஜா பாராட்டிப் பேசியது, பலரது கவனத்தினை ஈர்த்தது. குறிப்பாக, இளையராஜாவே ஒரு படத்தினை இவ்வளவு பாராட்டிப் பேசுகின்றார் என்றால், படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கும்போல என்ற பேச்சு திரையுலகில் அடிபட்டது.

சூரி: விடுதலை பாகம் 1 படம் ரிலீஸ் ஆனதுமே, படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதிலும் குறிப்பாக, நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை, படத்தின் கதாநாயகனாக மாற்றியது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் சூரியை கதாநாயகன் என்ற மனநிலையை வெற்றிகரமாக உருவாக்கிய பெரும் பணியை விடுதலை பாகம் 1இன் மூலம், வெற்றி மாறன் செய்து முடித்தார். படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது மட்டும் இல்லாமல், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்று, விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.

viduthalai part 2

முதல் நாள் வசூல்: இப்படி பெரும் எதிர்பார்ப்பினை உண்டாக்கிய, விடுதலை பாகம் 2, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 8 கோடிகள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே வரவேற்பைப் பெற்ற படம் என்பதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூலாக கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X