Vijay Sethupathi: விஜய்யின் லியோ படத்தில் நானா..? ரத்னகுமார் சொன்னது இதுதான்... விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

இதனிடையே லியோ படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக ரத்னகுமார் ஒரு சீக்ரெட் அப்டேட் கொடுத்திருந்தார்.

தற்போது இந்த அப்டேட் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Vijay Sethupathi: Vijay Sethupathi explains that he did not act in Vijays Leo film

லியோவில் இணைகிறாரா விஜய் சேதுபதி:மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனராஜ். அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர் லோகேஷ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் என இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். லோகேஷ் - விஜய் சேதுபதி காம்போ ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் ஹீரோவாக நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. அதேபோல், லியோ லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி, லியோ விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய் - லோகேஷ் இணையும் இரண்டாவது படம் என்பதால், இது மாஸ்டர் படத்தின் செகண்ட் பார்ட்டாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து லோகேஷ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேநேரம், லியோ லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இணைந்தால், இதில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Vijay Sethupathi: Vijay Sethupathi explains that he did not act in Vijays Leo film

இதனிடையே லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வசனகர்த்தா ரத்னகுமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதாவது விஜய் சேதுபதி இப்படத்திற்காக பின்னணி குரல் கொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியின் புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் ரத்னகுமார். இதனால், லியோவில் விஜய் சேதுபதி நடிப்பது கன்ஃபார்ம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால், விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இது வதந்தி எனவும், லியோ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளாராம். அதேபோல், ரத்னகுமார் ஏன் அந்த புகைப்படத்தை பதிவிட்டார் என்பது தனக்கு தெரியாது எனவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவாக நடித்த டான்ஸர் வசந்தி ஆகியோர் லியோ படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X