Vijay Sethupathi: பாலிவுட் ஹீரோக்களை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி... 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வில்லன்

சென்னை: சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கேரியரை தொடங்கியவர் விஜய் சேதுபதி. தற்போது இந்தியாவில் அதிக் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக மாஸ் காட்டி வருகிறார். அதன்படி இந்தாண்டு பாலிவுட் வில்லன் நடிகர்களை அசால்டாக ஓவர்டேக் செய்துள்ள விஜய் சேதுபதி, வில்லன் கேரக்டருக்காக பல கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கிய வில்லன்
கோலிவுட்டில் வெரைட்டியான் நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறார். ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதி, இன்று மோஸ்ட் வாண்டட் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வில்லனாக விஜய் சேதுபதி தான் மாஸ் காட்டி வருகிறார்.

 Vijay Sethupathi: Vijay Sethupathi received the highest salary for a villain character In 2023

கமலின் நம்மவர் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டருக்கு ஆடிஷன் சென்றுள்ளார் விஜய் சேதுபதி. அப்போது அவருக்கு 16 வயது தான், ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் விஜய் சேதுபதியை ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம். அதன்பின்னர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துபாயில் அக்கவுண்டட்டாக வேலை பார்த்தார். பின் மீண்டும் சென்னை திரும்பிய விஜய் சேதுபதி, மார்கெட்டிங் கம்பெனியில் சேல்ஸ் மேனாகவும் வேலை பார்த்துள்ளார்.

ஆனாலும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் கூத்துப் பட்டறையில் அக்கவுண்டட்டாக வேலைக்கு சேர்ந்த விஜய் சேதுபதி, அப்படியே சினிமாவில் முகம் காட்டத் தொடங்கினார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு, பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் கம்பேக் கொடுத்தன. மினிமம் பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, விக்ரம் வேதா படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக பேட்டை, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர், கமலுக்கு வில்லனாக விக்ரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கில் உப்பென்னா படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார். இதனால் பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுதான் 2023ம் ஆண்டில் வில்லன் நடிகருக்காக கொடுக்கப்பட்ட அதிக சம்பளம் என சொல்லப்படுகிறது.

ஷாருக்கானின் பதான் படத்தில் வில்லனாக நடித்த ஜான் ஆப்ரஹாம் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். லியோ படத்திற்காக சஞ்சய் தத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டைகர் 3 படத்தில் வில்லனாக நடித்த இம்ரான் ஹாஷ்மியும் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். முக்கியமாக அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி தியோல் கூட 4 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கியுள்ளார். ஒட்டுமொத்த பாலிவுட் வில்லன்களையும் கோலிவுட்டில் இருந்து சென்ற விஜய் சேதுபதி காலி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X