Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் வெள்ளிக்கிழமை வைப்... கூட யார்லாம் இருக்காங்கன்னு பாருங்க..!
சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்து வருகிறார். ஒருநேரத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து தற்போது லீடிங் ஹீரோவாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் சமீபத்திய போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் வெள்ளிக்கிழமை வைப்: கோலிவுட்டின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விஜய் சேதுபதி, பின்னர் சின்ன சின்ன ரோல்களில் முகம் காட்டினார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகராக கெத்து காட்டி வருகிறார். அதேபோல் ஹீரோ ரோல் தான் என்றில்லாமல் வெரைட்டியாக நடிப்பதிலும் விஜய் சேதுபதி தனி ரகம் தான்.

தற்போது விடுதலை 2ம் பாகத்திலும் தனது 50வது படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனால் எப்போதுமே பிஸியாக வலம் வரும் விஜய் சேதுபதி, நேரம் கிடைக்கும் போது மட்டுமே குடும்பத்துடன் என்ஜாய் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி, அவரது மனைவி ஜெஸி, மகன் சூர்யா, மகள் ஸ்ரீஜா ஆகியோர் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். கலர் போட்டோவாக இல்லாமல் கறுப்பு வெள்ளையில் செம்ம கிளாஸிக்காக இருக்கிறது இந்த போட்டோ. விஜய் சேதுபதியின் இந்த ஃபேமிலி போட்டோவை வெள்ளிக்கிழமை வைப் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிந்துபாத், நானும் ரவுடி தான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தனி ஹீரோவாகவும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் முகிழ் என்ற படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி மட்டும் இல்லாமல் அவரது மகன், மகள் ஆகியோரும் சினிமாவில் அறிமுகமாகிவிட்டதால் தற்போது நட்சத்திரக் குடும்பமாக வலம் வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் க்யூட்டான ஃபேமிலி போட்டோ வெளியாகி ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், விஜய் சேதுபதி வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடியாகிவிட்டார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளனர். ஜாவான் படம் வெளியான பின்னர் இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











