Vijay Sethupathi: மகாராஜா ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் லீக்... வித்தியாசமாக மிரட்டும் விஜய் சேதுபதி!
சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வரும் மகாராஜா படப்பிடிப்பு, வேகமாக நடந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் மகாராஜா படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது மகாராஜா படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மகாராஜா ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் லீக்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது தனது 50வது படத்தில் பிஸியாகிவிட்டார். மகாராஜா என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை நிதிலன் இயக்கி வருகிறார்.
குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் அறிமுகமான நிதிலன், இரண்டாவது படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். குரங்கு பொம்மை திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், விஜய் சேதுபதியின் மகாராஜாவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு விக்ரம், இந்தாண்டு ஜவான் படங்களில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, மகாராஜாவில் கேங்ஸ்டராக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், விஜய் சேதுபதியின் கெட்டப் படுமிரட்டலாக இருந்தது. கையில் அரிவாளுடன் விஜய் சேதுபதி மரண மாஸ் காட்டியிருந்தார். இதனால் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்து ஹைப் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஜா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விடுதலை வாத்தியையும் விக்ரம் சந்தானத்தையும் மிக்ஸ் செய்ததைப் போன்று, வித்தியாசமாக இருக்கிறார் விஜய் சேதுபதி. இன்னொரு போட்டோவில் நட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த புகைப்படங்கள் மாஸ் காட்டுகின்றன.
விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி வரும் மகாராஜா, 2024 தொடக்கத்தில் அல்லது சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விரைவில் மகாராஜா படத்தில் இருந்து ஸ்பெஷலான அப்டேட்டையும் படக்குழு வெளியிட பிளான் செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











