துபாயில் ஒரு நாள்: அக்கவுண்டன்ட் வாழ்க்யை அசை போட்ட விஜய் சேதுபதி
துபாய்: கவண் படத்தை விளம்பரப்படுத்த துபாய் சென்ற விஜய் சேதுபதி தான் அக்கவுண்டன்டாக வேலை செய்தபோது கிடைத்த நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்த விஜய் சேதுபதிக்கு படம் என்றால் உயிர். ஆனால் சம்பாதிக்க வேண்டுமே. அதனால் சினிமா கனவுகளை கண்களில் சுமந்தபடியே புர் துபாய்க்கு சென்று அக்கவுண்டன்டாக பணியாற்றினார்.
சில தமிழ் பசங்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அறையில் தங்கி வேலை பார்த்தார்.

சினிமா
3 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்த பிறகு நாடு திரும்பிய விஜய் சேதுபதி சினிமா துறையில் நுழைந்தார். கஷ்டப்பட்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகே ஹீரோவானார்.

விஜய் சேதுபதியா?
விஜய் சேதுபதியை பெரிய திரையில் ஹீரோவாக பார்த்தபோது துபாயில் வசிக்கும் அவரது நண்பர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. சினிமா, சினிமா என்று இருந்த விஜய் சேதுபதியின் கனவு நனவானதை நினைத்து அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

துபாய்
கவண் படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி துபாய் சென்றார். 2000ம் ஆண்டு துபாய் சென்றபோது விஜய் சேதுபதியை யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அனைவருக்கும் தெரிந்த முன்னணி ஹீரோ.

நண்பர்கள்
பெரிய ஹீரோவாக ஆனாலும் பழையவற்றை மறக்காமல் தான் அக்கவுண்டன்டாக வேலை பார்த்தபோது கிடைத்த நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி. அவரை நினைத்து அவரது நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications