கன்னட ஹீரோ நடிக்கிறாராமே..? அந்த ஹீரோவின் தெலுங்கு படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாரா?
சென்னை: அல்லு அர்ஜூனின் தெலுங்கு படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

புட்ட பொம்மா
த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மெகா ஹிட்டானது. இந்தப் படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார்.

ட்விட்டரில் சாதனை
தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது.

வன அதிகாரி
இது செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வன அதிகாரியாக நடிக்கிறார் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்தப் படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

விஜய்சேதுபதி விலகல்
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக வேறு நடிகரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே கன்னட ஹீரோ தனஞ்செயா இதில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே பைரவ கீதா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்தப் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

யாதும் ஊரே
விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை. விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தெலுங்கில் உப்பெனா என்ற படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஜனநாதன் இயக்கும் லாபம், அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால்சிங் சத்தா என்ற படத்திலும் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











