ரிஸ்க் எடுக்க தயாரான விஜய் சேதுபதி, வேறு மாதிரி விளையாடிய விதி
Recommended Video
ஹைதராபாத்: வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் இளைய மகன் வருண் தேஜ் தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோ அவதாரம் எடுக்கும் படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார்.
உப்பெனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தார்கள்.

விஜய் சேதுபதி
உப்பெனாவில் விஜய் சேதுபதி வில்லன் மட்டும் அல்ல ஹீரோயினின் தந்தையாகவும் நடிக்க சம்மதித்தார். ஒரு முன்னணி ஹீரோவாக இருந்து கொண்டு இந்த விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரே என்று கூறி வியக்காதவர்களே இல்லை எனலாம். அனைவரும் வியந்த அந்த விஷயம் நடக்கப் போவது இல்லை.

தாமதம்
உப்பெனா படத்தின் படப்பிடிப்பு அறிவித்தபடி துவங்கவில்லை. ஹீரோயின் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் தான் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆகியுள்ளது. படப்பிடிப்பு பல தடவை தள்ளிப்போனதால் விஜய் சேதுபதிக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி
தமிழ், மலையாளம் என்று கை நிறைய படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதியால் உப்பெனா படத்திற்கு புதிதாக டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பிரபல நடிகர் ராணா தயாரிக்கிறார். 800 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்களாம். விஜய் சேதுபதி தன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நினைத்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











