Vijay Sethupathi: நடுராத்திரி 2 மணிக்கு விஜய் சேதுபதி செய்த வேலை.. என்ன இந்த அளவுக்கு இறங்கிட்டாரு!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவைக் கடந்து இந்திய சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இவர் தனக்காக உருவாக்கியுள்ள தாக்கம், அவரை மக்கள் செல்வன் என அழைக்க காரணம் எனலாம். இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் சேதுபதி தற்போது படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் தொகுப்பாளராகவும் உள்ளார். கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார் எனும்போது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் அவற்றையெல்லாம் முதல் நாளே அடித்துத் துவம்சம் செய்துவிட்டார் என்றே கூறவேண்டும். இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. விஜய் சேதுபதி, "இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" எனக் கூறியதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் அளவிற்கு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் பார்த்த ரசிகர்கள், கமல்ஹாசனை விட சிறப்பாகவே விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என பாராட்டினர்.

குறிப்பாக கமல்ஹாசன் ஒரு கேள்வியை அல்லது பதிலை நீட்டி முழக்கிக் கூறுவார். ஆனால் விஜய் சேதுபதி அப்படி இல்லாமல் நேரடியாக ஒரே வார்த்தையில் முகத்தில் அடித்ததைப்போல் சொல்லிவிடுவதால் இது ரசிகர்களுக்கு ராப்பிட் ஃபயர் பார்ப்பதைப்போல் உள்ளது என கமெண்ட் அடிக்கின்றனர்.
நாமினேஷன்: நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 27 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை வீட்டில் இருந்து ஆண்கள் அணியில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அதேபோல் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் வெளியேறியுள்ளார். இப்படியான நிலையில் வாராவாரம் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் வெற்றி பெற்று பெண்கள் அணியினரே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இது ஆண்கள் அணியில் உள்ள தொய்வினைக் காட்டுகின்றது என ஆண் போட்டியாளர்களே சொல்லுகின்றனர்.

2 மணி: இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 2ஆம் தேதி எபிசோடில் விஜய் சேதுபதி பேசுகையில், தனக்கு கடந்த ஒரு வாரமாகவே இரவு ஷூட்டிங் தான் போய்க்கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு எல்லாம் அமர்ந்து பிக் பாஸ் பார்த்துக் கொண்டு உள்ளேன் என அவர் தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தான் ஏற்றுக்கொண்ட தொழிலுக்காக மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் விஜய் சேதுபதி நடந்து கொள்கின்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எவிக்ஷன்: மேலும் விஜய் சேதுபதி தீபாவளி கொண்டாடவில்லை எனவும், இன்றுதான் தீபாவளி புத்தாடை அணிவதாகவும் கூறினார். இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசாக புத்தாடை அனுப்பினார். இன்று அதாவது நவம்பர் 3ஆம் தேதி மொத்தம் இரண்டு சர்ப்ரைஸ்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது, வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருக்கலாம் எனவும் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது எனவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











