செம்ம சர்ப்ரைஸ்.. என்ன சொல்றீங்க ஆக்ஷன் படத்துல விஜய்சேதுபதியா?
Recommended Video
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று சோலோ ரிலீசாக ஆக்ஷன் படம் வெளியாகியுள்ளது.
கடைசி நேர சிக்கல் காரணமாக விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் இன்று வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆக்ஷன் படத்தில் விஜய்சேதுபதியின் சர்ப்ரைஸ் என்ட்ரி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆக்ஷன்
ராணுவ வீரர் சுபாஷாக நடிகர் விஷால் நடித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் இதுவரை காணாத அளவுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஆக்ஷன் படம் நிச்சயம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ள ஆக்ஷன் படம் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தை போன்று தேசிய அளவிலான அரசியல் மற்றும் தீவிரவாத சக்திகளை அழிக்க ராணுவ வீரர் போராடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.
எப்படி இருக்கு
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் ஆரம்பத்தில் சில பல மொக்கை ஜோக்குகளுடன் ஆரம்பித்தாலும், இடைவேளையில் வரும் ஆக்ஷான் காட்சிகளில் இருந்து படம் ஜெட் வேகத்தில் சூடு பிடித்து, இறுதி காட்சியில் மிரட்டியிருக்கும் ஆக்ஷன் காட்சிகளால் படத்தில் இருந்த சிறு குறைகளும் மறைந்து நிறைவான அனுபவத்தை தருவதாக இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.
ஏமாத்திட்டாரு
சில மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளை தவிற லாஜிக் இல்லாத திரைக்கதையால், சுந்தர். சி நம்மை ஆக்ஷன் படத்தில் ஏமாற்றிவிட்டார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஆக்ஷன் படம் ஒரு நல்ல அறிமுக படமாக அமையவில்லை. விஷால் மற்றும் தமன்னாவின் ஆக்ஷன் காட்சிகள் ஓகே என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
விஜய்சேதுபதி என்ட்ரி
ஆக்ஷன் படம் ஆரம்பிக்கும் முன்பாக, சர்ப்ரைஸ் என்ட்ரியாக நடிகர் விஜய்சேதுபதி வருகிறார். என்னடா விஷாலின் ஆக்ஷன் படம் பார்க்க வந்தோமா அல்லது விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் பார்க்க வந்தோமா என ரசிகர்கள் குழம்ப, தமிழ் ரசிகர்கள் புரிந்து கொள்வதற்காக, ஆக்ஷன் படத்தில் பிற மொழி பேசும் கதாபாத்திரங்களும் தமிழில் பேசுவார்காள் என நட்புக்காக விஜய்சேதுபதி சொல்லிவிட்டு கிளம்புகிறார்.


Click it and Unblock the Notifications











