விஜய் சேதுபதியுடன் 3வது முறையாக இணையும் ராஷி கண்ணா… மக்கள் செல்வனின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா இருவரும் 3வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ராஷி கண்ணாவின் பிறந்தநாளையொட்டி விஜய் சேதுபதி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று விஜய் சேதுபதியை ராஷி கண்ணா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது லாபம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து தற்போது வெளியாகவுள்ள கடைசி விவசாயி படத்தை அவர் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா
இவர் நடிகை ராஷி கண்ணாவுடன் இணைந்து சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தியில் உருவாகும் வெப் தொடரிலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்த ராஷி கண்ணா இந்திக்கு வரும் விஜய் சேதுபதிக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.

பிடித்த நடிகர் விஜய் சேதுபதி
மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் மனிதருடன் 3வது முறையாக இணைந்து நடிப்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். ஷாகித் கபூர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த வெப் தொடரில் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தி பேமிலிமேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இந்த தொடரை இயக்கவுள்ளனர்.

ராஷி கண்ணா பிறந்தநாள்
இந்நிலையில் இன்றைய தினம் ராஷி கண்ணாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். மேலும் அவரது அழகான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடி இரு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்
இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷி கண்ணா, பின்னர் தெலுங்கு, தமிழ் என நடித்து வருகிறார். மலையாளத்திலும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் படத்தின்மூலம் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் இவர் அறிமுகமானார்.
Recommended Video

விஜய் சேதுபதியுடன் ஜோடி
தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடிக்கவுள்ளார். தொடர்ந்து புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











