2 பேருக்குமே 2 வேடம்.. நடிகர் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டிலாமே..!

By

சென்னை: விஜய் சேதுபதி, டாப்ஸி நடிக்கும் படத்துக்கு வைத்துள்ள டைட்டில் வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி.

தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மித்தாலி ராஜ் பயோபிக்

மித்தாலி ராஜ் பயோபிக்

இந்தி சினிமாவுக்கு சென்ற டாப்ஸி, அங்கு நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, அவர் தப்பட் படத்தில் நடித்திருந்தார். இது ஹிட்டாகி இருந்தது. இப்போது ராஷ்மி ராக்கெட் உள்பட சில படங்களில் நடித்து வரும் அவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான, சபாஷ் மித்து உள்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

இதற்கிடையே, பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் இப்போது அவர் நடித்து வருகிறார். தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இதன் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. காமெடி படமான இதில் ராதிகா சரத்குமார், யோகிபாபு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடிக்கிறனர்.

செல்ஃபி புகைப்படம்

செல்ஃபி புகைப்படம்

ஒரே கட்டமாக, இதன் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க உள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடக்கும் இதன் ஷூட்டிங்கில் இணைந்த நடிகை ராதிகா சரத்குமார், விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வைரலானது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் பணியாற்றுகிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

Recommended Video

Bigg Boss Tamil Predicted Contestant Shalu Shammu Exclusive | Kamal Hassan
அனபெல் சுப்ரமணியம்

அனபெல் சுப்ரமணியம்

படத்தில் விஜய் சேதுபதியும் டாப்ஸியும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். ஒன்று இப்போதைய கேரக்டராகவும் மற்றொன்று சரித்திர கேரக்டராகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் படத்துக்கு அனபெல் சுப்ரமணியம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனபெல்லாக டாப்ஸியும் சுப்ரமணியமாக விஜய்சேதுபதியும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X