தியேட்டரில் காத்துவாங்கிய ஏஸ்.. விஜய்சேதுபதியை கவுத்த சூரி.. மூன்றாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்' திரைப்படம் மே 23 ந் தேதி வெள்ளிகிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், ருக்மணி வசந்த், யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், பப்லூ பிரிதிவீராஜ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதியும், யோகி பாபுவும் இப்படத்தில் படம் முழுக்க வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான காமெடி காட்சிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், படத்தின் திரைக்கதை வலுவாக இல்லாததால் படம் வசூலை அள்ள முடியாமல் தள்ளாடி வருகிறது.

மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்த போதும், படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து, ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' இந்த படம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்தில், மலேஷியா செல்லும் விஜய் சேதுபதிக்கு, யோகி பாபுவின் நட்பு கிடைக்கிறது. அவரின் உதவியால் ஒரு ஓட்டலில், சமையல் வேலையில் சேர்ந்து வேலை செய்து வருகிறார்.

Vijay sethupathi ace

கதையே இல்லை: விஜய்சேதுபதி தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் ருக்மிணி வசந்த் மீது காதல் வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இந்த நேரத்தில் தான், தனது காதலி பணத்திற்காக கஷ்டப்படுவது தெரிகிறது. இதற்காக உதவி செய்ய நினைக்கும் விஜய்சேதுபதி சூதாட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெருகிறார். இதனால், கடுப்பான சூதாட்ட கிளப்பில் இருக்கும் எதிரிகள், சரியான திட்டம் தீட்டி, விஜய் சேதுபதியில் சூதாடவைத்து அவனை பெரும் கடனில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால், மலேசியாவில் பெரிய டான் ஆக இருக்கும் தர்மாவிடம் சிக்கிக்கொள்ள, சூதாட்டத்தில் தோற்ற பணத்தை கொடுக்கவில்லை என்றால், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான். இதில், இருந்து தப்பிக்க நினைக்கும் விஜய்சேதுபதி வங்கியில் இருந்து கொண்டு வரப்படும் ரூ 40 கோடி பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறான். அவரின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா... என்பது தான் 'ஏஸ்' திரைப்படத்தின் கதை.

காத்துவாங்கும் ஏஸ்: ஏஸ் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் இல்லாததாலும், படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு கதை இல்லாததாலும், படம் மோசமான விமர்சனத்தையும், மோசமான வசூலையும் பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே படத்தின் வசூல் ரூ 1 கோடியும், இரண்டாம் நாள சனிக்கிழமை ரூ.1.67 கோடியாக இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் ரூ.1.71 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால், சூரி நடித்த மாமன் திரைப்படம் 9வது நாளான நேற்று ரூ.2.7 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் மொத்த வசூல் ரூ.20.45 கோடியை வசூலித்துள்ளதாக Sacnilk தளம் தெரிவித்துள்ளது. நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருவதால், அந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த படம் தான் 'ஏஸ்' திரைப்படம் தியேட்டரில் காத்து வாங்குவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X