Gandhi Talks Day 1 collection: காந்தி டாக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ள படம் காந்தி டாக்ஸ். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழு நீள மௌனப்படமாக இப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மௌனப் படம் (silent film) படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் எந்த வசனமும் இல்லாமல் உணர்வுகளை நடிப்பின் மூலம் கடத்தி இருக்கிறார் விஜய்சேதுபதி. படத்தின் கதை என்னவென்றால், மும்பையில் ஒரு வேலை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார் விஜய்சேதுபதி, உடல்நிலை சரியில்லாத அம்மாவை கவனித்துக் கொள்ளும் அவர் ஒரு நிலையான வேலையை தேடி அலைகிறார். எதிர்வீட்டில் இருக்கும் அதிதி ராவ் ஹைதாரி காதலிக்கிறார். அதிதிக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருக்கின்றனர். இன்னொருபுறம் பெரும் செல்வந்தராக இருந்து நொடித்துப் போய் வாழ்வின் விளிம்பில் நிற்கும் அரவிந்த் சாமி, ஒரு விபத்தில் தனது குடும்பத்தை இழந்து, பிறகு சொத்துகளையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறார். இந்த இருவரும் ஒரு புள்ளியில் இணையும்போது, இருவரது வாழ்விலும் சில திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் இவர்களின் வாழ்க்கை என்ன நடந்தது என்பது தான் காந்தி டாக்ஸ் படத்தின் கதை.

முதல் நாள் வசூல்: படத்தின் தலைப்பு தொடங்கி ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் மையக்கரு என்ன என்பதை வசனங்களின்றி மிக எளிமையாக பார்வையாளர்களுக்கு புரிய வைத்து இருக்கிறார் இயக்குநர். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம், 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் அதன் முதல் நாளில் தோராயமாக ₹1.20 கோடி முதல் ₹1.80 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் சுமார் ₹1.50 கோடியை வசூலித்துள்ளது. நேற்று திரையரங்குகளில் பார்வையாளர்களின் வருகை குறைவாகவே இருந்தது, காலை காட்சிகள் மந்தமாக இருந்தன, ஆனால் பெரிய நகரங்களில் உள்ள மல்டிபிளெக்ஸ்களில் மாலை காட்சிகளில் கூட்டம் காணப்பட்டது. வாரக்கடைசி என்பதால் படத்தின் வசூல் நிச்சயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











