54th IFFI - போடு செம.. 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் படம்.. முழு விவரம் உள்ளே

கோவா: 54th IFFI (இந்திய சர்வதேச திரைப்பட விழா) கோவாவில் நடைபெற்று வரும் 54ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்த காந்தி டாக்ஸ் திரையிடப்பட்டது.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம் சார்பில் நடத்தப்படுவது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகும். சர்வதேச படைப்பாளிகள் ஒன்றுகூடும் இந்த விழாவில் சிறந்த படங்கள் திரையிடப்படும். இந்த வருடத்துக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (54ஆவது விழா) கோவாவில் நவம்பர் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

Vijay Sethupathis Gandhi Talks Movie Screening in 54th IFFI

கோலாகல தொடக்கம்: அதன்படி இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் நடிகர் ஷாகித் கபூர் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. இரண்டு பேரின் நடனமும் விழாவில் பங்கேற்றவர்களை அதிகமாகவே கவர்ந்தது.

சத்யஜித் ரே விருது: நிகழ்ச்சி தொடங்கியவுடன் மாதுரி தீட்சித்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நான்கு இடங்களில் மொத்தம் 9 நாட்கள் இந்த விழாவானது நடைபெறவிருக்கிறது. மொத்தம் 89 இந்திய திரைபப்டங்கள், 62 ஆசிய திரைப்படங்கள் 10 சர்வதேச திரைப்படங்கள், 13 உலக திரைப்படங்கள் திடையிடப்படவிருக்கின்றன. மேலும் இதில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படவிருக்கிறது.

விஜய் சேதுபதியின் படம்: இந்த சூழலில் இவ்விழாவில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் காந்தி டாக்ஸ் என்ற மௌன மொழி படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டு படமானது திரையிடப்பட்டது. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கின்றனர். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் மௌன மொழி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்கள்: அதேபோல் தமிழிலிருந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவானது 28ஆம் தேதி முடிவடையவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X