விஜய் சேதுபதி நடித்த ‘காந்தி டாக்ஸ்‘.. மௌனப்படத்தின் டீசர் வெளியானது!
சென்னை: மக்கள் செல்வன் என அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் 48வது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்த காந்தி டாக்ஸ் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு விஜய்சேதுபதிக்கு நல்ல ஆண்டாக இருந்தது எனலாம், கடந்த வரும் அவர் நடிப்பில் இரண்டு படம் வெளியானது. ஆறுமுக குமார் இயக்கிய ஏஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். கணவன் மனைவிக்குள் என்னத்தான் சண்டை வந்தாலும், விட்டு கொடுத்து போவது தான் வாழ்க்கை என்ற வாழ்க்கை நெறிமுறையை சொல்லும் திரைப்படமா இப்படம் இருந்தது.

காந்தி டாக்ஸ்: இதையடுத்து இந்த ஆண்டு கிஷோர் பி. பெல்லேக்கர் இயக்கிய காந்தி டாக்ஸ் படம் ஜனவரி 30ந் தேதி வெளியாக உள்ளது. இதில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முழு நீள மௌனப் படம் (silent film) படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு வசனமும் இல்லாமல் உணர்வுகளை நடிப்பின் மூலம் கடத்தி உள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது. டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு சிங்கேதம் சீனிவாசா ராவ் இயக்கத்தில், அமலா, டின்னு ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











