பாக்ஸ் ஆபிஸை தட்டித் தூக்க காத்திருக்கும் விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே பத்திரிக்கையாளர் காட்சியில் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல விமர்சகர்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே மகாராஜா படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

அனைத்து விமர்சனங்களும் படத்துக்கு எந்த ஒரு விதத்திலும் நெகட்டிவாக செல்லாமல் ரசிகர்களை படத்தைப் பார்க்க தூண்டியுள்ளது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் படத்தை தரமாக செதுக்கி இருக்கிறார்.

Vijay Sethupathi Maharaja Box Office Mamta Mohandas Abhirami Anuragh Kashyap


விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மகாராஜா படத்தில் நடித்துள்ளனர்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்: ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன், வலைப்பேச்சு டீம் உள்ளிட்ட பல யூடியூப் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகை விமர்சகர்கள் என பலரும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களை டிக்கெட் எடுக்க வைத்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான பல படங்கள் ரசிகர்களை தொடர்ந்து சோதித்து வந்த நிலையில் அரண்மனை 4, கருடன் படங்களைத் தொடர்ந்து மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் என பலரும் கூறியுள்ளனர்.

முதல் நாள் வசூல் கணிப்பு: உலகம் முழுவதும் மகாராஜா திரைப்படம் 1915 ஸ்க்ரீன்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது. சமீபத்தில் துபாய்க்கு சென்று புர்ஜு கலிஃபாவிலேயே படத்துக்கான புரமோஷனை விஜய் சேதுபதி செய்திருந்தார். இந்நிலையில், முதல் நாள் வசூல் மட்டும் 5 முதல் 7 கோடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதாக வேறு ஏதும் படங்களும் இன்று வெளியாகாத நிலையில், விஜய் சேதுபதி இந்த வாரம் சோலோ ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாள் கல்லா கட்டலாம்: வரும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் பாக்ஸ் ஆபீஸில் மகாராஜாவாகவே மக்கள் செல்வன் வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் புரமோஷன்: விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி என படத்தில் நடித்த பலரும் தொடர்ந்து இந்த படத்துக்கான புரமோஷனை பல்வேறு யூடியூப் சேனல்களில் நிகழ்த்தி வருகின்றனர். ஹீரோவாக விஜய் சேதுபதி தமிழில் கம்பேக் கொடுப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளட் நிலையில், நிச்சயம் மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கின்றனர்.

தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்: மகாராஜா படத்தை ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என யாரும் காத்திருக்காமல் தியேட்டரில் பாருங்கள், நிச்சயம் நீங்க கொடுக்கிற டிக்கெட் காசுக்கு வொர்த்தான படமாக இது இருக்கும் என படக்குழுவினரும் புரமோஷன் செய்து வருகின்றனர். படத்தை பார்த்த விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர். கருடன் படம் 40 கோடி வசூலை கடந்து 50 கோடி வசூலை அடைய உள்ள நிலையில், மகாராஜா படம் விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி வசூல் படமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X