மகாராஜா 3ம் நாள் வசூல்..தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. சம்பவக்காரனாக மாறிய விஜய் சேதுபதி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நடிகராக இருந்து இன்று மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. வில்லன், ஹீரோ, குணசித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்திலும் ஸ்கோர் செய்துவிட்டார். வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இப்படத்தின் மூன்றாம் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ். நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார்.

மகாராஜா: சலூன் கடை வைத்து இருக்கும் விஜய்சேதுபதி(மகாராஜா) என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவர் காவல்நிலையத்தில், காயத்துடன் லட்சுமி காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். பதறிப்போன போலீசார் லட்சுமி யார் மனைவியா.. மகளா என விசாரிக்கும் போது அது, அது மதிக்கத்தகாத பொருள் என்று தெரிகிறது. இதனால் போலீசார் இதற்கு எல்லாம் கேஸ் கொடுக்க முடியாது என்று சொல்ல, போலீஸாருக்கு லஞ்சமாக தருகிறேன் என விஜய் சேதுபதி பேசி முடிக்க. நட்டி நட்ராஜ் அந்த லட்சுமியை தேடத் தொடங்குகிறார். அதன் பின்னர் பல திடுக்கிடும் விஷயங்கள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக கதை நகர்ந்து,மாஸாக மகாராஜா படம் முடிகிறது.
வாரிக்குவிக்கும் வசூல்: தமிழ்,தெலுங்கில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் 450 திரையரங்கிலும், ஆந்திரா 380, கேரளா 165, கர்நாடகா 160, வட இந்தியா 60, வெளிநாடுகளில் 700 தியேட்டர்களில் திரையிடப்பட்டன.அப்படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா திரைப்படம் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி முதல் நாளில் உலகளவில் ரூ.7.5 கோடி வசூலை வாரிக்குவித்த இப்படம் இரண்டாம் நாளான சனிக்கிழமை உலக அளவில் ரூ.11.95 கோடியாக இருந்தது. இப்டபத்திற்கு தொடர்ந்து மக்களிடமிருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருந்ததார், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
மாஸ் காட்டிய விஜய்சேதுபதி: மூன்றாவது நாளில் உலக அளவில் ரூ.9 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.7 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளதாம். இதன்மூலம் மூன்றே நாட்களில் உலகளவில் மகாராஜா திரைப்படம் ரூ.21.45 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரமான படம்: கடந்த ஆண்டு விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது மகாராஜா படம் வெளியாகி அவருக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது. இந்த ஆண்டு பிறந்து ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் அரண்மனை 4, சூரியின் கருடன் படம் மட்டுமே நல்ல வசூலை பெற்றன. அந்த வரிசையில் தற்போது மகாராஜா படம் வந்து வசூலில் மாஸ்காட்டி வருகிறது. நிச்சயம் இந்த படம் 100 கோடியை அள்ளும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











