Maharaja Box Office: மகுடம் சூடினாரா மக்கள் செல்வன்.. மகாராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதியான நேற்று வெளியானது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, முனிஷ்காந்த், திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகாராஜா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே குவிந்த நிலையில், படத்தை பார்த்த பொதுமக்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். கடைசியில் கிளைமேக்ஸ் காட்சியில் எல்லாம் விஜய் சேதுபதி அழ வைத்து அனுப்புகிறார் என மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறுகின்றனர்.

அந்த லட்சுமியை காணோம் என வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டி காணாமல் போய் விட்டது என ஆரம்பத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதியாக அவர் பேசும் போது சிரிக்கும் ரசிகர்கள் கிளைமேக்ஸ் நெருக்கத்தில் அதே விஷயத்தை கூறும்போதே கண்கலங்க வைத்து விடுகிறார்.
இதயம் கனக்குது: நித்திலன் சாமிநாதன் முதல் பாதியில் இடம் பெறும் ஸ்டேஷன் காட்சிகளை நகைச்சுவையாக கொண்டு சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் அந்த இடங்களை எல்லாம் காட்டும் போது இதயத்தை கனக்க வைத்து விடுகிறார். அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இன்னொரு முகம் இருக்கும், இன்னொரு வாழ்க்கை இருக்கும் வில்லனுக்கும் குடும்பம் இருக்கும், அவன் தப்பு செய்வது தெரிந்தால் அவன் குடும்பத்திலேயே அவனை மதிக்க மாட்டாங்க என்பதை எல்லாம் ரொம்பவே ஆழமாகவும் அழுத்தமாகவும் காட்டியிருப்பது சிறப்பு.
மகுடம் சூடிய மகாராஜா: தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் கதைகளையும் தேடித் தேடி விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், அவரது 50வது படமான மகாராஜா அவருக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக் காட்சியிலும் சரி கடைசியாக மண்டை மீது கத்தியை போட்டு பொளக்கும் காட்சியிலும் சரி விஜய் சேதுபதியின் நடிப்பு கதி கலங்க வைக்கிறது.
முதல் நாள் வசூல் நிலவரம்: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் மகாராஜா 7 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயம் இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடியை தொடுமா?: சூரி நடித்த கருடன் திரைப்படம் 50 கோடி வசூலை அடைந்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் நட்டி நட்ராஜின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக 100 கோடி வசூல் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருடன் படத்துக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் இந்த படத்துக்கும் கொடுப்பார்கள் என தெரிகிறது. எந்தளவுக்கு படம் வசூல் வேட்டை நடத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











