கருடனை விட ஜெட் வேகம்.. விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இதுவரை ஆடிய வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் ஆறு நாட்களில் அதிரடியாக 50 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் கடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஜய் சேதுபதி ஓகே சொன்ன இடத்திலேயே அவருக்கு வெற்றி கிடைத்து விட்டது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இருந்து தமிழ் சினிமாவுக்கு பல திறமையான இயக்குநர்கள் கிடைத்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்ற இயக்குநர்கள் வரிசையில் நித்திலன் சாமிநாதனும் இடம்பெற்றுள்ளார்.

Box Office Vijay Sethupathi Maharaja Garudan Soori

முதல் படமாகவே இந்த கதையை இயக்க நினைத்த அவருக்கு பல நடிகர்கள் இந்தக் கதையை படமாக்க வேண்டாம் என்றே சொல்லி வந்ததாகவும், அதற்காகவே குரங்கு பொம்மை படத்தின் கதையை எழுதி அதை படமாக்கினேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு கிடைத்த வெற்றி: வில்லனாக ஒரு பக்கம் வெற்றி பெற்று வந்தாலும் ஹீரோவாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு பெரிதாக வசூல் ரீதியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வெற்றி மகுடத்தை சூடிவிட்டது.

கருடனை தொடர்ந்து: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்த கருடன் திரைப்படம் மே 31-ஆம் தேதி வெளியாகி அதிரடியாக இரண்டு வாரங்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்நிலையில், ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூலை படுவேகமாக மகாராஜா திரைப்படம் கடந்திருப்பது தமிழ் சினிமாவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரமும் மகாராஜா தான்: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட விஜய் படங்கள் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. மேலும், விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள லாந்தர் மற்றும் வடக்கன் என பெயர் வைக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரயில் என தலைப்பு மாற்றப்பட்ட அந்தப் படமும் இந்த வாரம் வெளியாகிறது. புதிதாக பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், மகாராஜா திரைப்படம் இந்த வாரமும் பாக்ஸ் ஆபீஸில் முரட்டு சம்பவம் செய்யும் என்றும் சுமார் 70 முதல் 75 கோடி ரூபாய் வசூலை இந்த வார இறுதியில் பெற்றுவிடும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அடுத்த வாரம் கல்கி: மேலும், இன்னும் ஒரு வாரம் மகாராஜா படம் எந்தவொரு இடையூறும் இல்லாமல் திரையரங்கில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா மற்றும் பசுபதி நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகிறது. அதற்குள் 100 கோடி வசூலை மகாராஜா படம் பெற்று விடும் எனக் கூறுகின்றனர். இந்த படம் விஜய் சேதுபதிக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என்றும் மீண்டும் நித்திலன் சாமிநாதன் உடன் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X