மகாராஜா சீனாவிலும் மாஸ் காட்டப் போறாரு.. ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?.. இயக்குநர் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, சாச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி மகாராஜா திரைப்படம் வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அந்த படம் அங்கே 150 கோடி லாபத்தை ஈட்டித் தந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் நம்பர் ஒன் இடத்தில் ஓடிடியில் மகாராஜா படம் ராஜநடை போட்டது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவை இந்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டாடி கொண்டிருந்த நிலையில், தமிழ் சினிமாவை தலைநிமிர செய்த படமாக மகாராஜா மாறியது. இந்நிலையில், அடுத்து சீனாவில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஓல்டு பாய் படம் போல: கடந்த 2003ம் ஆண்டு தென் கொரியாவில் வெளியான ஓல்டு பாய் படத்தை போல மகாராஜா படத்தை பார்த்த ரசிகர்கள் கம்பேர் செய்து பாராட்டினர். இந்த படத்தின் எடிட்டிங் பேட்டர்னையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் வேறலெவலில் கொண்டாடினர். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தைக் கொடுத்து விஜய் சேதுபதியின் 50வது படத்தை வெற்றிப் படமாக மாற்றிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவை வைத்து மகாராணி எனும் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் எப்போ ரிலீஸ்?: விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை சீனாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு டப்பிங் பணிகளை தீவிரப்படுத்தி வந்தனர். சீனாவில் இந்த படம் க்ளிக் ஆனால், தங்கல் படம் போல வசூல் குவிக்கும் என்கிற திட்டத்துடன் இந்த வேலையை படக்குழு செய்துள்ள நிலையில், வரும் நவம்பர் 29ம் தேதி மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சீனாவின் பிரபல தொழிலதிபர் அலிபாபா க்ரூப்ஸ் சார்பில் இந்த படம் சீனாவில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸில் விஜய் சேதுபதி: மகாராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு வரிசையாக விஜய் சேதுபதி படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டிரெய்ன் படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை. விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், இன்னமும் வெற்றிமாறன் பேட்ச் வொர்க் செய்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். ஏஸ் எனும் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மகாராஜா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும் அவரது ரீல் மகளான சாச்சனாவையும் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலை 2 திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மீண்டுமொரு 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் படமாக அமையுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். நித்திலன் சாமிநாதனும் சீக்கிரமே தனது அடுத்த படத்தை ஆரம்பித்து ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











