100 கோடியை நெருங்கிய மகாராஜா.. விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி.. 11 நாள் வசூல் நிலவரம் இதோ!

சென்னை: குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, திவ்யபாரதி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம் 11 நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

96 மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தவிர்த்து விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமே 60 கோடி ரூபாய் அளவுக்குத்தான் வசூல் செய்தது. இதுவரை விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே 100 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை.

Vijay Sethupathi Maharaja Box Office

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் அந்த சாதனையை இன்னும் ஒரு வாரத்தில் படைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 11 நாட்களில் மகாராஜா படம் வசூல் செய்தது எத்தனை கோடி என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

கன்டென்ட் தான் முக்கியம்: சிறப்பான கதை மட்டுமின்றி சிறப்பான மேக்கிங் உடன் கூடிய கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மகாராஜா படம் உணர்த்தியுள்ளது. நான் லீனியர் எடிட்டிங்கில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் வித்தியாசமான எடிட் கட்ஸ் உடன் ரசிகர்களை அசந்து போக வைத்த படமாக மகாராஜா படம் வெளியாகி விஜய் சேதுபதிக்கு வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.

மகாராஜா 11 நாள் வசூல்: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் இதுவரை 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்த வாரம் கல்கி ரிலீஸ் ஆகும் வரை மகாராஜா வசூல் ராஜாவாக வலம் வரும் என தெரிகிறது.

ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ஓடிடியில் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான மகாராஜா 85 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X