Merry Christmas - பொங்கலுக்கு செம ட்ரீட் இருக்கு.. ரேஸில் இணைந்த விஜய் சேதுபதி.. என்ன நடக்குமோ?
மும்பை: Merry Christmas Release (மெர்ரி கிறிஸ்துமஸ் ரிலீஸ்) 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் சேதுபதி நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் ரிலீஸாகவிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய அவர் தீவிரமாக முயற்சித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2012லிருந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் விஜய் சேதுபதி கரியரின் உச்சத்தில் இருந்த சமயம். அந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

முன்னணி ஹீரோ: அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி நட்புகளுக்காக சில படங்களில் நடித்தார், தயாரிக்கவும் செய்தார். அதனால் அவருக்கு பொருளாதார ரீதியாக கொஞ்சம் அடி விழுந்ததாகவும் அப்போது பேச்சு எழுந்தது. அதனையடுத்து அவர் நடித்த படங்கள் கொஞ்சம் சறுக்க செய்தன. இருப்பினும் அவருக்கென்று ரசிகரக்ள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஹிந்தி சென்ற விஜய் சேதுபதி: ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லன் ரோலையும் செய்தார். தொடர்ந்து அந்த ரோல்களிலும் தனது முத்திரையை பதித்துவிட்டு ஹிந்திக்கு சென்றார். அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியானது. அதில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். குறிப்பாக தனது சொந்த குரலிலேயே ஹிந்தியில் டப்பிங் பேசியும் அசத்தினார். கடைசியாக அவர் ஹிந்தியில் ஜவான் படத்திலும் நடித்திருந்தார்.
மெர்ரி கிறிஸ்துமஸ்: இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸில் கமிட்டாவதற்கு முன்னதாகவே மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற ஹிந்தி படத்தில் கமிட்டானார் விஜய் சேதுபதி. அந்தாதூன் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியிருக்கும் அப்படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஃபர்ஸி வெப் சீரிஸ் போலவே இந்தப் படமும் விஜய் சேதுபதிக்கு பெயர் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் ரிலீஸ்: இந்தப் படம் முதலில் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி படமானது 2024ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினி நடித்திருக்கும் லால் சலாம், தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.
இந்த சூழலில் விஜய் சேதுபதியும் பொங்கல் ரேஸில் இணைந்திருக்கிறார். இதன் மூலம் அடுத்த வருட பொங்கலுக்கு சினிமா ரசிகர்கள் செம ட்ரீட்டை அனுபவிக்க இருக்கின்றனர். இந்த ரேஸில் எந்த படம் வின்னராகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











