ஒரே மாதத்தில் ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்.. அட இயக்குநரும் ஒருத்தர்தான்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் கல்லாக்கட்டியுள்ளது. படம் முன்னதாக வெளியாகி 110 கோடிகளுக்கும் மேல் வசூலித்த நிலையில், கடல் சில வாரங்களுக்கு முன்பு சீனாவிலும் வெளியிடப்பட்டு 80 கோடிகளை தாண்டி வசூலித்திருந்தது.
அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விடுதலை 2 படமும் வெளியாகி 50 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. இந்தப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து மிஷ்கின இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகின்றன. அவரது 50வது படமாக வெளியான மகாராஜா படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 110 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கும் 80 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படமான விடுதலை 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படமும் கடந்த சில தினங்களில் 50 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது.
விடுதலை 2 படம்: வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியர், சூரி, கென் கருணாஸ், சேத்தன், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை விஜய் சேதுபதிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் அவர் அதிரடி காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான சூழலில், விஜய் சேதுபதிக்கு அந்த படத்தில் கேமியோ கேரக்டர் மட்டுமே அமைந்திருந்தது. இந்நிலையில் படத்தின் 2வது பாகத்தில் அவரது ஆளுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
மிஷ்கின் இயக்கத்தில் 2 படங்கள்: அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்திலேயே விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து கேமியோ கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்கு போராடி வருகிறது. படத்தின் சாட்டிலைட் உள்ளிட்ட உரிமைகள் விற்பனையாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை தயாரிப்பு தரப்பு தற்போது முடுக்கி விட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இரு படங்கள்: இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தையும் மிஷ்கின் இயக்கியுள்ளார். இந்த படமும் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு செய்யப்பட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளில் பிசியாக உள்ளது. இதனிடையே இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு படங்களுமே வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளன.பிசாசு 2 படம் ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள நிலையில் ட்ரெயின் படமும் ஒரே நாளில் நடக்கும் படியாக திரில்லர் பானையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களுமே விஜய் சேதுபதிக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











