Vijay Sethupathi Son: அப்பாவோட கம்பேர் பண்ணாதீங்க.. கெத்து காட்டும் விஜய்சேதுபதி மகன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் தற்போது பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் அவர் கமிட்டாகியுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்தப் படத்தை தன்னுடைய சொந்த பேனரில் தயாரித்து இயக்கவுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இயல்பான நடிப்பால் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தன்னை ஹீரோவாக மட்டுமே வெளிப்படுத்தாமல் வித்தியாசமான கேரக்டர்களில் தன்னை பார்க்கும் விருப்பம் மற்றும் தைரியம் கொண்டவர். தற்போது வில்லனாகவும் மாஸ் காட்டி வருகிறார். கமல், விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் வில்லனாக நடித்து விட்டார். மேலும் முன்னணி ஹீரோக்களுடனும் மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த சூர்யா: ஹீரோவாகவும் இவர் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படம் கோவா சர்வதேச திரைப்பட திரையிடப்பட்டுள்ளது. பேசும் படமான இந்தப் படத்தின் நாயகன் விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் படத்தில் அவருடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார்.
ஹீரோவாக கமிட்டான சூர்யா: தற்போது சூர்யா கல்லூரியில் படத்துவரும் சூழலில் அவர் ஹீரோவாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இந்தப்படத்தை தன்னுடைய சொந்த பேனரில் தயாரித்து இயக்கவுள்ளார். பீனிக்ஸ் வீழான் என்ற இந்தப் படத்தில் சூர்யாவிற்கு இரண்டு நாயகிகள் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து அனல் அரசு மற்றும் சூர்யா இருவரும் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.
நம்பிக்கை கொடுத்த விஜய் சேதுபதி: அப்போது தன்னுடைய படிப்பு, கேரியர் என அனைத்து விஷயங்களையும் பேசிய சூர்யாவிடம் விஜய் சேதுபதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தன்னுடைய அப்பாவுடன் தன்னை கம்பேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் வேறு தான் வேறு என்றும் சூர்யா பேசினார். தான் நடிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை தன்னுடைய அப்பா வெளிப்படுத்தியதாகவும் தான் பயந்தபோது தனக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
விடுதலை 2வில் சூர்யா: வெற்றி மாறனின் விடுதலை 2 படத்திலும் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் தனியாக ஹீரோவாக அவர் கமிட்டாகியுள்ள வீழான் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் அனல் அரசு இயக்கிவரும் சூழலில் ஆக்ஷன் காட்சிகளும் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.
வீழான் படத்தின் ரிலீஸ்: சூர்யாவின் வீழான் படத்தின் பூஜை இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் விஜய் சேதுபதி பங்கேற்கவில்லை. அவர் துபாயில் சூட்டிங்கில் உள்ளதாகவும் அங்கிருந்தபடி தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை படக்குழுவினர் மற்றும் சூர்யாவிற்கு பகிர்ந்துள்ளதாகவும் படத்தின் இயக்குநர் அனல் அரசு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படத்தை சிறப்பாக உருவாக்குவதே தற்போதைய நோக்கம் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











