Nadu center Review 1: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியின் ‘நடு சென்டர்‘ வெப் தொடர் விமர்சனம்!
சென்னை: கூடைப்பந்து விளையாட்டுக் களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெப் தொடர் தான் 'நடு சென்டர்'. இதில், கலையரசன், சசிக்குமார், விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி, சூர்யா எஸ்.கே, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். நரு நாராயணன் இயக்கி இருக்கும் இத்தொடருக்கு, ஹெஸ்டின் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். 17 எபிசோடுகள் கொண்ட நடு சென்டர் வெப்தொடரில், வாரா வாரம் ஒவ்வொரு எபிசோடுகள் வெளியாக இருக்கும் நிலையில், இந்த வாரம் 3 எபிசோடுகள் வெளியாகி உள்ளது. இதன் விமர்சனத்தை பார்க்கலாம்,.
வசதியான குடும்பத்தில் பிறந்த பிகே அதே பகுதியில் உள்ள, பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 'பிகே'வை அந்த பள்ளி நிர்வாகம், அவனின் மோசமான நடவடிக்கையால் திடீரென வெளியே அனுப்பி விடுகிறது. வேறு எந்த பள்ளியிலும் 'பிகே'விற்கு ஷீட் கிடைக்காததால், பெற்றோர்கள் கவலையடைந்து அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.

நடு சென்டர் வெப்தொடர்: அந்த பள்ளியில் போதைப்பொருள் பழக்கம், சண்டை, மோசமான வார்த்தைகளில் பேசுவது, ராகிங் என சில மாணவர்கள் ரௌடிசம் செய்கின்றனர். இதனால், இந்த பள்ளியில் தினம் தினம் ஏதாவது ஒரு சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான பள்ளிக்குத்தான் 'பிகே' வருகிறான். மோசமான செயலால் பெரிய பள்ளியில் இருந்து 'பிகே' வெளியே அனுப்பியது தெரிந்தும், இந்த பள்ளியின் துணை தலைமை ஆசிரியரான ஆஷா சரத், பிகே நேஷனல் பிளேயர் என்பதாலும், எப்படியாவது, மாணவர்களை விளையாட்டு பக்கம் திசை திருப்பி விட்டால், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்திவிடலாம், அதுமட்டுமில்லாமல் இந்த பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நினைக்கிறார்.
போதை கலாச்சாரம்: முதல் நாள் பள்ளிக்கு வந்த பிகேவை, ரௌடி க்ரூப்பில் இருக்கும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ரேகிங் செய்கிறார். ஏற்கனவே இந்த ஸ்கூல் ரொம்ப மோசமான ஸ்கூல் என்பதால், 'பிகே' சண்டை எதுவும் போடாமல் அமைதியாக இருக்கிறான். ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்கூலில் மாணவர்கள் செய்யும் தொல்லை தாங்க முடியாமல், கதறி அழுதுக்கொண்டு, தன்னுடைய பழைய பள்ளியில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் என்பதை நினைத்து, தன்னுடைய போனை எடுத்து பார்த்து அழுகிறான். பிகே ஃபோனை பார்த்து அழுவதை கவனித்த, அந்த ஸ்கூலின் ரௌடி கேங், பிகேவின் போனை புடுங்கி, அதில் இருக்கும் பெண் தோழிகளின் நம்பதை எடுத்து தங்களின் ஃபோனில் Save செய்கின்றனர். இதனால், ஆத்திரப்படும் பிகே அவர்களை அடித்துவிட்டு, போனை வாங்கியது மட்டுமில்லாமல், ஒருவனின் ஃபோனை தூக்கி வீசி உடைத்து விடுகிறான். இதனால், ஆத்திரப்படும் அந்த ரௌடி கேங், இன்னைக்கு நீ செத்தடா... நீ ஒழுங்க வீடு போய் சேர மாட்டா என்று மிரட்டுகின்றனர்.
அடுத்து என்ன நடக்கும்: இதனால் பயந்து போன பிகே, 'ரவுடி கேங்' கும்பளின் கண்ணில் சிக்காமல் எப்படியாவது வீட்டுக்கு சென்றுவிடலாம் என மறைந்து மறைந்து செல்கிறான். அவனை பின் தொடர்ந்து வந்த 'ரௌடி கேங்' பிகேவை வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு, உடைத்த போனுக்கான காசு இன்னும் ரெண்டு நாளுக்குள் தர வேண்டும் இல்லை என்றால் உன் கதை முடிந்தது என மிரட்டிவிட்டு செல்கின்றனர். இதையடுத்து பிகே என்ன செய்தான், மீண்டும் அதே பள்ளிக்கு போவானா? இல்லையா? மீண்டும் கூடைப்பந்து விளையாடுவாரா என்பதை அடுத்தடுத்த எபிசோடில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











