Vijay Sethupathi: மகனுக்கு தேடிவந்த ஹீரோ சான்ஸ்... உஷாரான விஜய் சேதுபதி... இயக்குநர் இவரா?
சென்னை: கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகராக மாஸ் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவரது மகன் சூர்யா ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது அவருக்கு தழிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாகும் படத்திற்கு இயக்குநரும் ரெடியாகிவிட்டாராம்.
ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது கேரியரை தொடங்கிய விஜய் சேதுபதி, இன்று பான் இந்தியா ஸ்டாராக மாஸ் காட்டுகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். விஜய் சேதுபதியின் நானும் ரெளடி தான், சிந்துபாத் படங்களில் சிறுவனாக நடித்திருந்தார் சூர்யா. இந்த இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு நல்ல அடையாளம் கொடுத்தன. அதன்பிறகு விஜய் சேதுபதியின் மகனை திரையில் பார்க்கவே முடியவில்லை. ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படத்தில் அவர் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை விஜய் சேதுபதி ஷேர் செய்திருந்தார். விஜய் சேதுபதியும் சூர்யாவும் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்த இந்த போட்டோ செம்ம வைரலானது. அரும்பு மீசையுடன் இளம் ஹீரோ லுக்கில் மாஸ் காட்டினார் சூர்யா. இதன்மூலம் தனது வீட்டிலும் ஒரு ஹீரோ ரெடியாகிவிட்டதாக விஜய் சேதுபதி சொல்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவந்தனர்.
ரசிகர்களின் இந்த கமெண்ட்ஸ் இப்போது உண்மையாகிவிடும் என தெரிகிறது. அதன்படி விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பிளான் போட்டுள்ளாராம். சூர்யாவுக்காகவே ஒரு கதை தயார்செய்து விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரும் ஓக்கே சொல்லிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதிக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும் சில நேரங்களில் அவரது படங்கள் தோல்வியடைகின்றன. இதனால், தனது வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோவையும் களமிறக்கலாம் என விஜய் சேதுபதி முடிவெடுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது. அதேநேரம் சூர்யா ஹீரோவாகும் முதல் படமே ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











