Viduthalai 2 movie: விடுதலை 2 படத்தின் சென்சார் நிறைவு.. படத்துல சம்பவம் இருக்கும் போலயே!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர்,கென், சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படத்தில் நடிகர் சூரியின் கேரக்டர் மிகச்சிறப்பாக காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதயின் வாத்தியார் கேரக்டர் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி -மஞ்சு வாரியரின் காதல் ரசிகர்களை அதிகமாக கவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

vijay sethupathi viduthalai 2 movie censor certificate

விடுதலை 2 படம்: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் வெற்றியையும் வரவேற்பையும் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாகி உள்ளது. கடந்த பாகத்தில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படத்தின் கதைக்களம் அமைந்த நிலையில் அதில் கேமியோ கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில் அவரது ஃப்ளாஷ் பேக்காக படத்தின் முந்தைய பாகமாக உருவாகியுள்ளது விடுதலை 2 படம். இந்த படத்தின் கதைக்களத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டர் மிகப்பெரிய அளவில் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வாத்தியாராக விஜய் சேதுபதி: விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு அழகான காதலும் காதலியாக மஞ்சு வாரியரும் உள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியை இளமையாக காட்டுவதற்காக அவருக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலை இந்த படம் இன்னும் சில தினங்களில் வரும் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இந்த படத்தை மிகுந்த மெனக்கடலுடன் செதுக்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். படத்தில் சில தினங்கள் நடிப்பதற்காக வந்த விஜய் சேதுபதி, தற்போது முழுநீள கதையில் நடித்து முடித்துள்ளார்.

மாஸ் காட்டும் பாடல்கள் & ட்ரெயிலர்: விடுதலை படத்திற்காக 7 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்த அவர், தற்போது இந்த விடுதலை 2 படத்தில் 150 நாட்கள் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போலவே மஞ்சுவாரியரும் சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்ததாகவும் ஆனால் தற்போது இந்த படத்தில் அவருக்கு இரண்டு பாடல்கள் அமைந்துள்ளதாகவும் வெற்றிமாறன் முன்னதாக இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார். படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

சென்சார் நிறைவு: படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் அவரது எழுத்து மற்றும் வாய்ஸில் தினந்தோறும் பாடல் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. முதல் பாகம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய அதிரடியான வெற்றியை கொடுத்த நிலையில் இரண்டாவது பாகமும் அந்த லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறப்பான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகுதியான எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் சென்சார் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் ரன் டைம்: படத்திற்கு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதேபோல இந்த படத்தின் ரன் டைம் இரண்டு மணி நேரம் மற்றும் 24 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தை காட்டிலும் இந்த இரண்டாவது பாகத்தின் திரைக்கதை மிகவும் சிறப்பாக மற்றும் மிரட்டலாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X