கண்ணாடி, காப்பு மிரட்டும் மீசை - வித்தியாச கெட்டப்பில் விஜய் சேதுபதி
சென்னை: கிராமத்து பின்னணியில் அதிரடி, ஆக்சன் சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ள விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர், விஷால் நடித்த தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். சங்கத் தமிழன் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் உருவாகும் 6வது படமாகும்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர், சூரி ,அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
சிம்புவின் வாலு மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் மூன்றாவது படமாகும். வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அவ்வப்போது அதிரடி மற்றும் ஆக்சன் என கொஞ்சம் ஜனரஞ்சகமான படங்களிலும் நடிப்பது வழக்கம்.
அதேபோல் தான் சங்கத் தமிழன் படமும் இருக்கும் என்பது நேற்று வெளியான டீசரை பார்க்கும்போது தெரிகிறது என்று விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்தப் படத்தில் ஆக்சன் சண்டைக் காட்சிகள், அதிரடியான பஞ்ச் வசனங்கள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின்னணி வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் (Second Look poster) மற்றும் டீஸர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதுவும் கையில் காப்பு, கண்ணாடி, மிரட்டும் மீசை, என வித்தியாசமான கெட்டப்பில் கிராமத்து பின்னணியில் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











