twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் செல்வனுக்கு மக்களின் மனங்களைப் பற்றி தெரியவில்லையே

    |

    சென்னை: மக்கள் செல்வன் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய் சேதுபதியின் தற்போதைய நடவடிக்கைகள் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

    விஜய் சேதுபதி, முதலில் ஜெயம் ரவியின் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடிக்க ஆரம்பித்து, தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். தனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கும் வரையில், ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையிலும் காத்திருக்கும் கொக்கு போல் காத்திருக்க ஆரம்பித்தார்.

    இவருக்கான சரியான வாய்ப்பு இயக்குநர் சீனு ராமசாமியின் வடிவத்தில் தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் வாய்த்தது. இந்தப் படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. இருந்தாலும், இந்தப் படத்திற்கு பிறகும் இவருக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் தான், இவருக்கு திருப்பு முனையாக வாய்த்தது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம்.

    கூட்டத்தில் ஒருவன்

    கூட்டத்தில் ஒருவன்

    தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் ஹீரோவின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக வந்து பின்னாளில் தன்னுடைய நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தைப் பிடித்தவர்களில் விமலும், விஜய் சேதுபதியும் முக்கியமானவர்கள். நடிகர் விமல், ஆரம்பத்தில் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் நடித்து, பின்பு படிப்படியாக முன்னேறி களவாணி படத்தின் மூலம் ஹீரோவாக பவனி வர ஆரம்பித்தார்.

    நண்பர்களில் ஒருவன்

    நண்பர்களில் ஒருவன்

    ஆனால், நமது விஜய் சேதுபதியும் அதேபோல் முதலில் ஜெயம் ரவியின் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடிக்க ஆரம்பித்து, தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். தனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கும் வரையில், ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையிலும் காத்திருக்கும் கொக்கு போல் காத்திருக்க ஆரம்பித்தார்.

    தென்மேற்கு பருவக்காற்று

    தென்மேற்கு பருவக்காற்று

    இவருக்கான சரியான வாய்ப்பு இயக்குநர் சீனு ராமசாமியின் வடிவத்தில் தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் வாய்த்தது. இந்தப் படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. இருந்தாலும், இந்தப் படத்திற்கு பிறகும் இவருக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் தான், இவருக்கு திருப்பு முனையாக வாய்த்தது, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம்.

    தீனியாக அமைந்த படங்கள்

    தீனியாக அமைந்த படங்கள்

    இந்தப்படத்திற்கு பிறகுதான் இவருடைய சினிமா கிராஃப் ஏற ஆரம்பித்து என்று சொல்லலாம். தொடர்ந்து இவர் நடித்த பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி என அனைத்து படங்களுமே முற்றிலும் வேறு வேறு கோணத்தில் இவருடைய நடிப்புக்கு தீனியாக அமைந்த படங்கள் என்று சொல்லாம்.

    தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை

    தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை

    2015ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடித்த அனைத்து படங்களுமே, தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தன. இவர் தன்னுடைய சம்பளத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் தயாரிப்பாளர்களுக்கு அனுசரனையாக இருந்து, தன்னுடைய சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து படம் வெளிவர உதவி செய்வதால், தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவுக்கு நம்பிக்கையான நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார்.

    கைவசம் டஜன் படங்கள்

    கைவசம் டஜன் படங்கள்

    இதனால், விஜய் சேதுபதியின் பாக்கெட்டில் எப்போதும் ஒரு டஜன் படங்கள் இருந்துகொண்டே வருகிறது. வரும் 2023ஆம் ஆண்டு வரையிலும் இவருடைய கால்ஷீட் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பிசியான நடிகராக உள்ளார். அப்படி இருந்தாலும் கூட, தினசரி இவருடைய ஏதாவது ஒரு படபூஜை பற்றிய செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன.

    நலம் விரும்பிகள் அதிர்ச்சி

    நலம் விரும்பிகள் அதிர்ச்சி

    இவ்வளவு பிசியான, மக்கள் செல்வன் என்று பெயரெடுத்த நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய பேச்சுக்களும், படத்தேர்வுகளும் கவலையளிப்பதாகவே உள்ளது என்று அவருடைய நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள். கடந்த ஜூலையில் இவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படத்தின் பெயரைக் கேட்ட அவருடைய நலம் விரும்பிகளும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.

    முத்தையா முரளிதரன்

    முத்தையா முரளிதரன்

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தான், உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. காரணம், முத்தையா முரளிதரன், கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த சிங்கள ராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை பாராட்டினார்.

    என்கு டமிழ் தெர்யாத்

    என்கு டமிழ் தெர்யாத்

    அத்தோடு அங்குள்ள சிங்கள கிராமங்களுக்கு சென்று நட்புறவு பாராட்டியதோடு, அந்த கிராமங்களை தத்தெடுத்துக் கொண்டார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை சந்தித்து பேசிய தமிழர்களிடம், தனக்கு தமிழ் தெரியாது என்று கூறி சிங்களத்தில் பேசி அவர்களை அவமானப்படுத்தினார்.

    கல்லாவை நிரப்புவது இவர்கள் தான்

    கல்லாவை நிரப்புவது இவர்கள் தான்

    இப்படிப்பட்ட ஒரு தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிப்பது நியாயமா என்று உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் வேதனைப்படுகிறார்கள். இன்றைக்கு, இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இவர்களால் தான் தமிழ் படங்கள் அனைத்தும் கல்லாவை நிரப்புகின்றன. இவர்கள் மட்டும் படம் பார்க்காமல் தவிர்த்துவிட்டால், நிச்சயம் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

    இனத் துரோகியாக நடிப்பதா

    இனத் துரோகியாக நடிப்பதா

    இதை எல்லாம் மறந்துவிட்டு, விஜய் சேதுபதி எப்படி எங்கள் இனத்துரோகியான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கலாம் என்றும், அவர் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை வாபஸ் பெறவேண்டும் என்றும் கூக்குரல் எழுப்புகிறார்கள்.

    ஐ டோன்ட் கேர்

    ஐ டோன்ட் கேர்

    ஆனால், மக்கள் செல்வன் என்று சொல்லிக்கொள்ளும் விஜய் சேதுபதியோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார். தன்னுடைய பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.

    பட்டாசு எனக்கு பிடிக்காது

    பட்டாசு எனக்கு பிடிக்காது

    அதுமட்டுமில்லாமல், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் பட பூஜைக்கு வந்தபோது, ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அந்த விழாவில் பேசியபோது, எனக்கு பட்டாசு வெடிப்பது சுத்தமாக பிடிக்காது, யார் இந்த ஐடியாவை உங்களுக்கு கொடுத்தது என்று ஆவேசப்பட்டார்.

    படிப்படியாக உயர்ந்தவர்கள்

    படிப்படியாக உயர்ந்தவர்கள்

    இவருடைய பேச்சைக் கேட்ட ரசிகர்களும், இவருடைய சொந்த மாவட்ட மக்களும் வேதனைப்பட்டார்கள். இவரின் சொந்த ஊரான ராஜபாளையத்தை உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம் முழுவதுமே பட்டாசு தொழிலை நம்பித்தான் உள்ளது. இதில் மட்டுமே சுமார் 8 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த வேலையை பார்த்துதான் தங்களின் அன்றாட வாழ்க்கையே நடக்கிறது. இன்றைக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பவர்களும், ஆரம்பத்தில் இந்த பட்டாசு வேலை பார்த்துதான் படிப்படியாக உயர்ந்தவர்கள்.

    கண்ணை மறைக்கிறதா

    கண்ணை மறைக்கிறதா

    அப்படி இருக்கையில், விஜய் சேதுபதி இப்படி பேசியது பட்டாசு தொழிலில் இருப்பவர்கள் அனைவரின் மனதையும் காயப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். ஒருவேளை பணமும் புகழும் கண்ணை மறைக்கும் என்று சொல்வது உண்மையோ என்னவோ. எனவே, நடிகர் விஜய் சேதுபதி இனிமேலாவது படங்களை தேர்வு செய்யும்போது நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், பொது மேடையில் பேசும் போது யார் மனதையும் புண்படுத்தாமல் பேசவேண்டும் என்றும் அவருடைய நலம் விரும்பிகள் வேண்டுகிறார்கள்.

    English summary
    Vijay Sethupathi, who is being celebrated by Tamil fans around the world as Jana Selvan, has expressed his displeasure among fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X