Exclusive: என்னா மனுசன்ங்க அவரு.. நான் திரும்ப படங்களில் நடிக்க விஜய்சேதுபதி தான் காரணம்: கஸ்தூரி
தனது தோற்றத்தை வைத்து தான் கதாபாத்திரத்தை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திரைப்படங்களில் தான் மீண்டும் நடிப்பதற்கு, நடிகர் விஜய் சேதுபதி தான் காரணம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சலங்கை துரை இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் படம் "இ.பி.கோ 302". இப்படத்தை செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.
"இ.பி.கோ 302" திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி பட புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த நடிகை கஸ்தூரியை சந்தித்தேன்.
அவருடன் உரையாடியதில் இருந்து...

போலீஸ் வேடம்:
"போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. சாமி, சிங்கம் போல மாஸ் போலீஸ் படமாகத்தான் இருக்கும். நிஜ வாழ்க்கையில் நம் கிரண்பேடி போன்ற ஒரு ரோல்.

மென்மையான கதாபாத்திரங்கள்:
எனது தோற்றத்தை வைத்து தான் எனது கதாபாத்திரத்தை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் தான் நான் காதலியாக, மனைவியாக, தங்கையாக என மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரி ரோலுக்கும் என்னை அழைப்பார்கள் என நினைக்கிறேன்.

விஜய் சேதுபதி தான் காரணம்:
படங்களில் நான் மீண்டும் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தான் காரணம். அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். வில்லனாகவும் நடிக்கிறார். பெண்ணாகவும் நடிக்கிறார், திருநங்கையாகவும் நடிக்கிறார். இப்போது அவர் தான் என் இன்ஸ்பிரேஷன். அவரை போல் தான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

பாசாங்கு:
சினிமாவில் போலியாக பாசாங்கு செய்து கொண்டு காட்டுவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை நான் பேசினால் என்னைத் திட்டுவார்கள். ஆனால் சிலர் எனக்கு போன் செய்து பாராட்டுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











