புறம்போக்கு என்கிற பொதுவுடைமையும் யமலிங்கமும்!

By Shankar

வெறுமனே புறம்போக்கு என்று வைக்கப்பட்ட தலைப்பு நன்றாக இல்லை என நினைத்தாரோ என்னமோ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என தலைப்பை மாற்றி்விட்டார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குவதோடு யுடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்து வருகிறார் ஜனநாதன்.

Vijay Sethupathy is Yamalingam in Purambokku

சிறைகள்

இந்தப் படம் குறித்து ஜனநாதன் கூறுகையில், "சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறைச்சாலையில்தான் அரங்கேறி உள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்துதான் தங்களது வெற்றி சரித்தரத்தைத் தொடங்கினர்.

ஆர்யா

சிறைச்சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இருந்துள்ளது என்றால் மிகை ஆகாது. என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது.

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலியின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகப்படுத்தியவருமான மெக்காலேவின் பெயர் ஷ்யாமுக்கும் சூட்டப்பட்டுள்ளது.

யமலிங்கம் விஜய் சேதுபதி

மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது.

கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறைச்சாலை அரங்கின், ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X